தமிழகம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்​டப்​பேர​வைத் தேர்தலுக்​கான வேட்​பு மனுத் தாக்​கல் இன்​றுடன் நிறைவடைகிறது. புதுச்சேரியில் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களுக்​கான சட்டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.9-ம் தேதி நடக்​கிறது.

தேர்​தலுக்​கான வேட்​புமனுத் தாக்​கல் கடந்த 16-ம் தேதி தொடங்​கியது. தேர்​தல் இவ்​வளவு சீக்கிர​மாக அறிவிக்​கப்படும் என அரசி​யல் கட்​சிகள் எதிர்​பார்க்​கவில்​லை.

          

மனுத் தாக்​கல் தொடங்​கிய நிலை​யிலும், இண்​டியா கூட்ட​ணி​யிலும், என்​டிஏ கூட்​ட​ணி​யிலும் முடிவு ஏற்​ப​டா​மலேயே இழுபறி​யாக இருந்​தது.

இந்​நிலை​யிலும், என்​டிஏ கூட்​ட​ணி​யில் உள்ள முதல்​வர் ரங்​க​சாமி, அமைச்​சர்​கள் நமச்​சி​வா​யம், திரு​முரு​கன், சட்​டப்​பேரவைத் தலை​வர் செல்​வம், பேரவை துணைத் தலை​வர் ராஜவேலு, திமுக சார்​பில் எதிர்க்​கட்​சித் தலை​வர் சிவா மற்​றும் பாஜக எம்​எல்ஏ கல்​யாண சுந்​தரம், என்​.ஆர்​.​காங்​கிரஸ் எம்​எல்ஏ சந்​திர பிரியங்கா உட்பட மாநிலம் முழு​வதும் இது​வரை 135 வேட்​புமனுக்​கள் தாக்​கலாகி உள்​ளன.

என்​டிஏ கூட்​ட​ணி​யில் உள்ள என்​.ஆர்​.​காங்​கிரஸ் தரப்​பில் முதல்​வர் ரங்​க​சாமி உட்பட 8 பேர் மனுத்​தாக்​கல் செய்​தா​லும், என்​.ஆர்​.​காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட​வில்​லை. லஜக வேட்​பாளர்​களும் அறிவிக்​கப்​பட​வில்​லை. பாஜக, அதி​முக வேட்​பாளர்​கள் மட்​டும் அறிவிக்​கப்​பட்​டனர்.

இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சிகளுக்​கான வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட​வில்​லை. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி தனித்​துப் போட்​டி​யிடு​கிறது.

இந்​தச் சூழலில் இன்று (மார்ச் 23) மதி​யம் 3 மணி​யுடன் வேட்​புமனுத் தாக்கல் நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT