சென்னை: இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத்தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் ஐங்கரநேசன், கஜேந்திரன், சுரேஸ், காண்டீபன், சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் கடந்த 20-ம் தேதி எனது இல்லத்தில் என்னை சந்தித்தனர்.
இலங்கையில் தமிழர் தேசத்தில் அந்நாட்டு அரசால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வருவதை தெளிவுபடுத்தினர். தமிழர்களின் இந்நிலையை போக்க தற்போது இலங்கையில் அரசியல் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.
தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்க வேண்டும்.