தமிழகம்

மின் தளவாடங்களில் பழுதை 30 நிமிடத்தில் சரி செய்ய வேண்டும்: பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மின் தளவாடங்​களில் ஏற்​படும் பழுதை 30 நிமிடங்​களில் சரி செய்ய வேண்​டும் என பொறி​யாளர்​களுக்கு மின்வாரியம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் கோடை வெயி​லின் தாக்​கம் கடந்த சில நாட்​களாக அதி​கரித்து வரு​கிறது. இதனால் வீடு, அலு​வல​கங்​களில் ஏசி பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மின் பயன்​பாடு அதி​கரிப்​ப​தோடு, மின்​மாற்​றிகள், மின் விநி​யோகப் பெட்டி உள்​ளிட்ட சாதனங்​கள், அதிக மின்​பளு காரண​மாக பழு​தாவ​தால், சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் மின் தடை ஏற்​படு​கிறது. அதே​போல், இரவில் ஏசி பயன்​பாடு அதி​க​மாக இருப்​ப​தால் அவ்​வப்​போது மின் தடை ஏற்​படு​கிறது.

இந்​நிலை​யில் மின் தளவாடங்​களில் ஏற்​படும் பழுதை 30 நிமிடங்​களில் சரி செய்து உடனடி​யாக விநி​யோகத்தை சரி செய்ய வேண்டும் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: துணை மின்​நிலை​யங்​களில் இருந்​து, மின் வழித்​தடங்​களில் மின்​சா​ரத்தை அனுப்​பி, மின் தளவாடங்​களின் உதவி​யுடன், மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. ஒரு வழித்​தடத்​தில் பழுது ஏற்​பட்​டாலும், இரண்​டாவது வழித்​தடத்​தில் மின்​சா​ரம் அனுப்​பும் வசதி உள்​ளது. இதே​போல், மின்​மாற்​றிகளில் இருந்து வழித்​தடத்​தில் பழுது ஏற்​பட்​டாலும், மற்​றொன்​றின் வாயி​லாக மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. வெயி​லால் மக்​கள் சிரமப்​படும் நிலை​யில், மின் சாதனங்​களில் பழுது ஏற்​பட்டால், மாற்று வழித்​தடத்​தில் விரை​வாக மின்​சா​ரத்தை வழங்க வேண்​டும்.

மேலும், 30 நிமிடங்​களுக்​குள் பழுதை சரி செய்​து, மின்​சா​ரம் வழங்க வேண்​டும் என, பிரிவு அலு​வல​கப் பொறி​யாளர்களுக்கு உத்​தர​விடப்​பட்டு உள்ளது. தேவைப்படும் மாற்று சாதனங்​களை நேரடி​யாக வாங்​கிக் கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. பழுது நீக்​கும் பணிக்காக ஏற்​கெனவே, ஒரு அலுவல​கத்​துக்கு 5 முதல் 8 பணியாளர்​கள் தற்​காலிக​மாக நிய மிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.​

SCROLL FOR NEXT