தமிழகம்

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வுக்கு விவசாயிகள் வரவேற்பு

போதுமானதல்ல என அரசியல் கட்சியினர் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: நெல், கரும்​புக்​கான ஊக்​கத்​தொகை உயர்வுக்கு விவ​சாய சங்​கங்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்ள நிலை​யில், சில அரசி​யல் கட்​சி​யினர் அது போது​மானதல்ல என்று கூறியுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பாமக தலை​வர் அன்​புமணி: அரசால் கொள்​முதல் செய்​யப்​படும் நெல்​லுக்கு வழங்​கப்​படும் ஊக்​கத்​தொகை சன்ன ரக நெல்​லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்​லுக்கு ரூ.159 ஆகவும், கரும்​புக்கு ரூ.709.50 ஆகவும் உயர்த்தி தவெக அரசு அறி​வித்​துள்​ளது. இது போது​மானதல்ல. கரும்​புக்​கான ஊக்​கத் தொகை​யாக ரூ.1,117 சேர்த்து வழங்க முன்வர வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: ஆதார விலை​யுடன் நெல், கரும்​புக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி தவெக அரசு அறி​வித்​துள்​ளது வரவேற்​கத்​தக்​கது. விவ​சா​யிகளின் மற்ற கோரிக்​கைகளை​யும் பரிசீலனை செய்​து, அவற்றை படிப்​படி​யாக இந்த அரசு நிறைவேற்​றும் என்று நம்​பு​கிறோம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தேர்​தலின்​போது நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன்​னுக்கு ரூ.4,500-ம் வழங்​கப்​படும் என வாக்​குறுதி அளித்த தவெக, ஆட்​சிக்கு வந்​த​பின் அதை முழு​மை​யாக நிறைவேற்ற மறுப்​பது விவ​சா​யிகளுக்கு இழைக்​கும் துரோக​மாகும்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி: கடலூர் மாநாட்​டில் கரும்பு விவ​சாய சங்க தலை​வர் வலி​யுறுத்​தி​யதை ஏற்​று, டன் ஒன்​றுக்கு ரூ.709.50 சேர்த்து அறி​வித்​திருப்​பது பாராட்​டுக்​குரியது. விவ​சாயக் கடன்​களை​யும் முழு தள்​ளு​படி செய்து அரசு அறிவிக்​கும் என எதிர்​பார்க்​கிறோம்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க மாநில பொதுச்​செய​லா​ளர் சாமி.நட​ராஜன்: நெல்​லுக்​கும், கரும்​புக்​கும் முன் எப்​போதும் இல்​லாத அளவுக்கு ஊக்​கத்​தொகையை உயர்த்​தி​யுள்​ளது வரவேற்​கத்​தக்​கது.

இதை தமிழக விவ​சா​யிகளின் சிரமங்​களை உணர்ந்த செய​லாகக் கருதுகிறோம். இத்​துடன் கூட்​டுறவு பயிர் கடன் தள்​ளு​படியை​யும் தேர்​தல் வாக்​குறு​திப்​படி அறிவிக்க வேண்​டும்.

தமிழ்​நாடு கரும்பு விவ​சா​யிகள் சங்க மாநில பொதுச்​செய​லா​ளர் டி.ர​வீந்​திரன்: ஒரு டன் கரும்​புக்கு பாஜக அரசு ரூ.3,290 மட்​டுமே அறி​வித்த நிலை​யில், தவெக அரசு ஊக்​கத்​தொகை​யாக ரூ.709.50 சேர்த்து ரூ.4 ஆயிரம் அறி​வித்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது. இதற்​காக தவெக அரசுக்​கும், முதல்​வருக்​கும் நன்​றி.

தமிழகத்​தில் மூடப்​பட்​டுள்ள கூட்​டுறவு சர்க்​கரை ஆலைகளைத் திறக்​க​வும், பழமை​யான ஆலைகளை புதுப்​பிக்​க​வும் அரசு நிதி ஒதுக்​கீடு செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT