பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி அருகே தரையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

 
தமிழகம்

கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தரையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை லிட்​டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்​டும் என, விவ​சா​யிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு ஊக்​கத்​தொகை ஒரு ரூபாய் உயர்த்தி அறி​வித்​ததை விவ​சா​யிகள் ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், பொள்​ளாச்சி அருகே உள்ள மாப்​பிள்ளை கவுண்​டன் புதூர் கொள்​முதல் நிலை​யத்​துக்கு வந்த விவ​சா​யிகள் பாலை கொள்​முதல் நிலை​யத்​துக்கு வழங்​காமல், வீதி​யில் கொட்டி போராட்​டம் நடத்​தினர்.

இதுகுறித்து விவ​சா​யிகள் கூறும்​போது, “கேரளாவில் லிட்​டருக்கு ரூ.53 வரை வழங்​கப்​படு​கிறது. எங்​களுக்கு வழங்​கப்​படும் தொகை​யானது எந்த விதத்​தி​லும் உபயோகம் இல்லை. மாட்​டுக்கு தேவை​யான தீவனம் அதிக விலைக்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. இதனால் பால் உற்​பத்​தியை நஷ்டத்​தில் செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்டு வரு​கிறது. மேலும், தமிழக அரசு பயிர் கடனை தள்​ளு​படி செய்​வ​தாக அறி​வித்​திருந்​தது.

ஆனால் முழு​மை​யாக தள்​ளு​படி செய்​ய​வில்​லை. இதனால் விவ​சா​யிகள் பெரும் துயரத்​துக்கு உள்​ளாகி உள்​ளார்​கள். பால் கொள்​முதல் விலையை உயர்த்தி வழங்​கி​னால் உற்​பத்​தி​யாளர்​களின் வாழ்​வா​தா​ரம் மேம்​படும். எனவே, லிட்​டருக்கு 50 ரூபா​யாக உயர்த்தி வழங்க வேண்​டும்” என்​றனர்.

SCROLL FOR NEXT