பி.டி அரசகுமார்

 
தமிழகம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி: பின்னணி குறித்து விசாரணை தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாக ரூ.100 கோடி மோசடி விவ​காரத்​தில் திமுக நிர்வாகி கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், பின்​னணி​யில் உள்​ளவர்​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னை, தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்ளி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்று அளிக்​கப்​பட்​டது. அதில், ‘கடந்த 2 ஆண்​டு​களாக தமிழகத்​தில் உள்ள தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் தங்​கள் பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம், தரம் உயர்த்​துதல் மற்​றும் திட்ட அனு​மதி ஆகிய​வற்​றைப் பெறு​வ​தில் சிரமங்​களை எதிர் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, சென்​னை, சாலிகி​ராமத்​தில் ‘தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்​கம்’ என்ற பெயரில் பதிவு செய்​யப்​ப​டாத சங்​கத்தை நடத்தி வந்த சாலிகி​ராமம், மெஜஸ்​டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகு​மார் (59) என்​பவர் தனக்​குள்ள அரசி​யல் மற்​றும் அதி​கார தொடர்​பு​களைப் பயன்​படுத்தி தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்ளி தரம் உயர்​வு, திட்ட அனு​மதி உள்பட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி தமிழகம் முழு​வதும் உள்ள பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிட​மிருந்து பணம் பெற்​றுக் கொண்​டு,உறு​தி​யளித்​த​படி அனு​ம​தி​கள் பெற்​றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்​ளார்.

எனவே, பி.டி அரசகு​மார் மற்​றும் அதன் நிர்​வாகி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என புகாரில் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது. இதுகுறித்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, புகாருக்​குள்​ளான திமுக நிர்​வாகி​யான பி.டி.அரசகு​மாரை நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். இவரது பின்​னணி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வரும், மேலும் சிலரும் இருப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையடுத்​து, இந்த மோசடி​யின் பின்​னணி​யில் வேறு யார்? யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது என்ற பெயர் பட்​டியலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர். அதன் அடிப்​படை​யில் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT