தமிழகம்

தமிழக காங்கிரஸில் மீண்டும் வெடிக்கும் கோஷ்டி பூசல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சரி​யில்லை என முன்​னாள் காங்​கிரஸ் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டிய விவகாரத்​தில் தற்​போதைய மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூர் கொடுத்​துள்ள பதிலடி​யால் தமிழக காங்​கிரஸ் கட்​சிக்​குள் மீண்​டும் உட்​கட்​சிப் பூசல் வெடித்​துள்​ளது.

தமிழக காங்​கிரஸ் கட்​சி​யும் கோஷ்டிப் பூசலும் பிரிக்க முடி​யாதவை என அரசி​யல் வட்​டாரத்​தில் நீண்​டகாலமாகப் பேசப்​படும் ஒன்​றாகும். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து செல்வப் பெருந்தகையின் கருத்து மீது பரஸ்பரம் விமர்சனம் செய்வதால் சத்தியமமூர்த்தி பவன் பரபரப்பாக காணப்படுகிறது.

தமிழக அரசின் செயல்​பாடுகள் குறித்து சென்​னை​யில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்களிடம் செல்​வப்​பெருந்​தகை பேசும்​போது, “தமிழகத்​தில் சட்​டம், ஒழுங்கு இன்​னும் பலப்​படுத்​தப்​பட வேண்​டும். தற்​போதைய நிலை திருப்தி அளிக்​கும் வகை​யில் இல்லை” என கருத்து தெரி​வித்​திருந்​தார்.

தொடர்ந்து, மாணிக்​கம் தாகூரை நேரடி​யாகக் குறிவைத்​துப் பேசிய அவர், ’சனியன் பிடித்​தவர்​கள்’ என மாணிக்​கம் தாகூர் யாரைச் சொன்​னார் எனத் தெரிய​வில்லை. 2009-ல் சோனியா காந்தி தலை​வ​ராக இருந்​தார். ராகுல் காந்தி இளைஞர் அணி​யைப் பார்த்​துக்​கொண்​டிருந்​தார்.

எனவே, அவர் யாரை அந்த வார்த்​தையைச் சொல்​கிறார் என்​ப​தைத் தெளிவுபடுத்த வேண்​டும் எனக் கேள்வி எழுப்​பினார்.

மேலும், கள்​ளக்​குறிச்சி பெண் ஆட்சி​யருக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்​பிய விவகாரத்​தில் தவெக எம்​எல்ஏ-வை ‘பாவம்’ என மாணிக்​கம் தாகூர் குறிப்​பிட்​டதைச் சுட்​டிக்​காட்​டிய அவர், “அப்​படி​யென்​றால் எப்​ஸ்டீனையும், ஜெம் வீரமணி​யையும் கூடப் பாவம் எனச் சொல்ல முடியுமா?” என விமர்​சித்​திருந்​தார்.

இதற்கு மாணிக்​கம் தாகூர் அளித்த பதி​லில், “செல்​வப்​பெருந்​தகை கூறியது அவருடைய தனிப்​பட்ட கருத்து. அவர் தற்​போது காங்​கிரஸில் எந்​தப் பொறுப்​பிலும் இல்லை. தமிழகத்​தில் முந்​தைய திமுக ஆட்​சி​யில் நடந்த கொலை, கொள்ளைகளை ஒப்​பிடும்​போது இப்​போது குற்​றங்​கள் குறைவாகவே இருக்​கின்​றன.

தற்​போது நடக்​கும் நேர் ​மையான ஆட்​சி​யைப் பார்க்​கிறவர்​களுக்கு பய​மாக இருக்​கிறது. யாரெல்​லாம் திருட்​டுத்​தனம் செய்​தார்​களோ, ஊழல் செய்​தார்​களோ அவர்​களுக்​குத்​தான் பயம். அவர்​கள் இப்​படித்​தான் புலம்​பிக் கொண்​டிருப்​பார்​கள்” என பதிலளித்​தார்.

இந்த மோதல் குறித்து, அமைச்​சர் விஸ்வநாதன் கூறும்​போது, “செல்​வப்​பெருந்​தகை சட்​டம் ஒழுங்கு சரி​யில்லை என எந்​தக் கட்​சி​யி​லிருந்து கொண்டு இதைப் பேசுகிறார் என்​பதும் எந்​தக் கட்​சி​யில் இருக்​கிறார் என்​ப​தும் புரிய​வில்லை.

முதலில் அவர் எந்​தக் கட்​சிக்​குப் போகப்போகிறார் என்​ப​தைத் தெளிவுபடுத்​தட்​டும்” என்றார். இந்த வார்த்தை போர்களால் தமிழக காங்​கிரஸில் உட்​கட்​சிப் பூசல் கிளம்​பியுள்​ளதாக அரசி​யல் நோக்​கர்​கள் கூறுகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT