மதுரை உயர் நீதிமன்றம், கோப்புப் படம்.

 
தமிழகம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்களுக்கு விலக்கு கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு பணியி​லிருந்து முது​நிலை ஆசிரியர்​களுக்கு விலக்கு கோரிய வழக்​கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு மேல்​நிலைப் பள்ளிமுது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் சங்​கத்​தின் தலை​வர் வி.மணி​வாசகன், உயர் நீதி​மன்றமதுரை அமர்​வில் தாக்​கல் செய்தமனு: தமிழகத்​தில் அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் 10, பிளஸ் 1 மற்​றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்​களுக்கு பாடம் நடத்தி வரும் முது​நிலை ஆசிரியர்​கள் மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இதனால் பொதுத்​தேர்​வுக்கு தயா​ராகும் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​படும் சூழல் உள்​ளது.

இந்த நேரத்​தில் ஆசிரியர்​களை மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்கு அனுப்​புவ​தால் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​படும். எனவே, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வின் ஆளுகைக்கு உட்​பட்ட மதுரை, கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி உள்​ளிட்ட14 மாவட்​டங்​களில் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்​களுக்கு பாடம் நடத்​தும் முது​நிலை ஆசிரியர்​களை 2026 ஆகஸ்ட் மற்​றும் 2027 பிப்​ர​வரி மாதங்​களில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு பணிக்கு ஒதுக்​கீடு செய்​யக் கூடாது என இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்.

மேலும் 2027 பிப்​ர​வரி மாதம் மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு பணி​யில் இருந்து முது​நிலை ஆசிரியர்​களுக்கு விலக்கு அளித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், மனு குறித்து மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு இயக்​குநர், பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்​டும்.

மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு பணி​யில் ஆசிரியர்​களை ஈடு​படுத்​து​வது தொடர்​பாக கொள்கை அடிப்​படை​யில் பள்​ளிக்​கல்​வித் துறை முதன்​மைச் செய​லா​ளர் பதிலளிக்க வேண்​டும். இந்த வழக்​கில் 14 மாவட்​ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்க்​கப்​படு​கின்​றனர் என உத்தரவிட்டு விசா​ரணையை ஆக. 20-க்கு தள்​ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT