தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ம. பிரபு

 
தமிழகம்

“திமுக ஆட்சியின் ஆட்டத்துக்கு 15-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட்டுவிட்டது” - இபிஎஸ் பிரகடனம்

செய்திப்பிரிவு

ஊழல், விளம்​பரம் மட்​டும் செய்து வந்த திமுக ஆட்​சி​யின் ஆட்​டத்​துக்கு கடந்த 15-ம் தேதி​யுடன் முடிவு கட்​டப்​பட்​டு​விட்​டது. தமி​ழ​கத்​துக்கு இப்​போது வசந்த காலம் ஆரம்​ப​மாகி​விட்​டது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

‘சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினைக்கு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத திமுக-​விடம் இருந்து தமி​ழ​கத்தை மீட்​போம்’ என்ற முழக்​கத்​துடன் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் கட்​சிகள் ஒன்​றிணைந்து தமி​ழ​கம் முழு​வதும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தின. அதன்​படி விரு​கம்​பாக்​கம் தொகு​திக்கு உட்​பட்ட எம்​ஜிஆர் நகரில் நடை​பெற்ற.

          

ஆர்​ப்பாட்​டத்​துக்கு தலைமை தாங்​கிய பழனி​சாமி பேசி​ய​தாவது: திமுக ஆட்​சிப் பொறுப்​பேற்ற இந்த 5 ஆண்டு காலத்​தில் தமிழக மக்​கள் பட்ட துன்​பங்​கள் ஏராளம். போதைப் பொருள், கஞ்​சா, கள்​ளச்​சா​ராய விற்​பனை கிரா​மம் முதல் நகரம் வரை ஜரூ​ராக நடக்​கிறது. இதைப்​பற்றி கவலைப்​ப​டாத, கட்​டுப்​படுத்த திராணி​யற்ற, திறமையற்​றவ​ராக முதல்​வர் இருக்​கி​றார். மாண​வர்​கள், இளைஞர்​கள் பொது​மக்​கள் சீரழி​வதை அவ்​வப்​போது செய்​தி​களில் பார்க்​கும்​போது நெஞ்​சம் பதறுகிறது. போதைப்​பொருள் விற்​பனை அதி​கரித்​த​போது உளவுத்​துறை விழிப்​போடு இருந்து தகவல் தெரி​வித்​திருக்க வேண்​டும்.

ஆனால் தமிழக உளவுத்​துறை, ஸ்டா​லின் குடும்​பத்​துக்கு ஏவல் செய்​யும் துறை​யாக இருக்​கிறது. சென்னை மாநகரில் பட்​டப்​பகலில் ஆம்​ஸ்ட்​ராங் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்டார், இன்​று​வரை குற்​ற​வாளி​களைப் பிடிக்க முடிய​வில்​லை. அதே​போல் திமுக கூட்​ட​ணிக் கட்​சி​யான காங்​கிரஸின் நெல்லை மாவட்​டத் தலை​வர் ஜெயக்​கு​மார் வெட்டி எரித்​துக் கொலை செய்​யப்​பட்​டார். அதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை​யும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

பாலியல் வன்​கொடுமை நடக்​காத நாளே இல்​லை. தின​மும் அதி​காரி​கள் துணை​யுடன் கனிமவளம் கொள்ளை போகிறது. கரூரில் ரவுடிகளை வைத்து தின​மும் 3 ஆயிரம் லாரி​களில் ஒன்​றரை கோடி ரூபாய் அளவுக்கு பகிரங்​க​மாக மணல் கடத்​தப்​படு​கிறது. நகை, பணம் போல திமுக ஆட்​சி​யில் உடல் உறுப்​பு​களைத் திருடு​கி​றார்​கள். நாமக்​கல் மாவட்​டத்​தில் வறுமை​யில் இருக்​கும் ஏழை​களின் கிட்​னியை முறை​கே​டாக திமுக எம்​எல்​ஏ-​வின் மருத்​து​வ​மனை​யில் திருடி இருக்​கி​றார்​கள்.

மது விற்​பனை​யில் மட்​டும் நான்​காண்​டு​களில் ரூ.24 ஆயிரம் கோடி கொள்ளை அடித்​திருக்​கின்​ற​னர். மின்​கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​விலேயே கடன் வாங்​கு​தில் முதல் மாநிலம் தமி​ழ​கம் தான். அத்​தனை பேரை​யும் கடன்​காரர்​களாக ஆக்​கி​விட்​டார் ஸ்டா​லின். நாம் தான் கடனை கட்ட வேண்​டும். கடந்த 75 நாட்​களில் தமி​ழ​கத்​தில் 246 கொலை​கள் நடந்​துள்​ளது. கொலை நடக்​காத நாளே இல்​லை. இந்த ஆட்சி பொறுப்​பேற்​ற​தில் இருந்து யாருக்​கும் பாது​காப்​பில்​லை. கடந்த ஓர் ஆண்​டில் 1,408 கொலை​கள் நடந்​துள்​ளது. இதற்கு அதி​காரி​களை வைத்து பேட்டி கொடுக்​கி​றார்​கள், அமைச்​சர்​கள் முன்​வந்து பதில் சொல்ல முடி​யாத நிலை.

திமுக 525 வாக்​குறு​தி​களைக் கொடுத்​தது. அதில் நான்​கில் ஒரு பங்கு கூட நிறை​வேற்​ற​வில்​லை. ஆனால், 98 சதவீதம் நிறை​வேற்​றி​விட்​ட​தாக பச்​சைப் பொய் சொல்​கி​றார் ஸ்டா​லின். மக்​கள் திமுக-​வின் பொய்​யைப் புரிந்து கொண்டு இந்த ஆட்​சியை விரட்​டியடிக்க முன்​வந்​து​விட்​டார்​கள்.

அரசு ஊழியர்​கள் போராடு​கி​றார்​கள், தூய்​மைப் பணி​யாளர்​களை திமுக அரசு கொடுமைபடுத்​தி​யது. சத்​துணவு அமைப்​பாளர்​களும் போராடி​னார்​கள். சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினைக்கு முக்​கியக் காரணம் நிரந்தர டிஜிபி நியமிக்​க​வில்லை என்​பது​தான். உச்​சநீ​தி​மன்​றம் சொல்​லி​யும் நியமிக்​கத் திராணி​யற்ற அரசு திமுக அரசு.

குடும்ப ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் தேர்​தல் இது. ஊழல், விளம்​பரம் மட்​டும் செய்த திமுக ஆட்​சி​யின் ஆட்​டத்​துக்கு கடந்த 15-ம் தேதி​யோடு முடிவு கட்​டப்​பட்​டு​விட்​டது. தமி​ழ​கத்​துக்கு இப்​போது வசந்த காலம் ஆரம்​ப​மாகி​விட்​டது.

பெண்​களுக்​குப் பாது​காப்​பான ஆட்சி விரை​வில் வரும். இளைய சமு​தா​யத்​துக்கு ஒளிமய​மான எதிர்​காலம் காத்​துக்​கொண்​டிருக்​கிறது. மே மாதம் ஆட்​சிக்கு வரு​வோம்; நல்​லாட்சி கொடுப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, "அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் முழுமையாக வெளியிடப்படும். அதேபோல் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டையும் விரைவில் இறுதி செய்வோம்" என்றார்.

பை பை ஸ்டாலின்! - ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மேடையில் இருந்து புறப்பட்ட பழனிசாமி மைக் அருகில் வந்து கைகளை உயர்த்தி காட்டி, 'பை பை ஸ்டாலின்' என்றார். இதையடுத்து அக்கட்சி தொண்டர்களும் அதையே சொல்லி ஆரவாரமாக கோஷம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT