எடப்பாடி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

 
தமிழகம்

“அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்களின் குறைகளை தீர்த்து வைத்த கட்சி” - பழனிசாமி கருத்து

செய்திப்பிரிவு

மேட்டூர்: அ​தி​முக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்​கள் குறை​களை தீர்த்து வைத்த கட்​சி, என பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

எடப்​பாடி​ தொகுதியில் வாக்​காளர்​களுக்கு நன்றி தெரிவித்து நேற்று நடந்த பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: ஒவ்​வொரு கட்​சி​யும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு கிடை​யாது. வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி ஆட்​சிக்கு வரு​வது தொடர் கதை தான். தவெக 108 இடங்​களில் தான் வெற்றி பெற்​றுள்​ளது.

8 மாவட்​டங்​களில் ஒரு இடத்​தில் கூட வெற்றி பெற​வில்​லை. தவெக பல கட்​சிகள் ஆதர​வுடன் ஆட்​சி​யில் அமர்ந்​துள்​ளது. நாற்​காலிக்கு 4 கால்​கள் உள்ள நிலை​யில், 2 கால்​கள் தான் தவெக​வின் கால்​கள். மீத​முள்​ளவை இரவல் கால்​கள். எப்​போது வேண்​டு​மா​னாலும் 2 கால்​கள் உடை​யும்​போது நாற்​காலி தானாக சாயும். திமுக கூட்​டணி கட்சி எம்​எல்​ஏக்​கள் தான் தவெக ஆட்​சிக்கு முட்டு கொடுக்​கின்​றனர்.

தவெக தலை​வர் ரூ.10 லட்​சம் கோடி கடன் இருப்​ப​தாக தெரி​வித்த நிலை​யில் பல்​வேறு வாக்​குறு​தி​களை வெளி​யிட்​டார். இது​வரை எந்த அறி​விப்​பும் வெளி​யிட​வில்​லை. குடும்ப தலைவி​கள் 1.50 கோடி பேருக்கு மாதம் ரூ.2,500 என ஆண்​டுக்கு ரூ.45,000 கோடி தேவை. கொடுக்​கப்​பட்ட வாக்​குறு​தியை தட்​டிக் கழிப்​ப​தற்​காக வெள்ளை அறிக்கை வெளி​யிடப்​போவ​தாக மக்​களை ஏமாற்ற பார்க்​கிறீர்​கள்.

முதல்​வர் தலை​மை​யில் நடந்த அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​கள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது என தெரிவிக்​கப்​பட்​டது. எந்த துறை​களில் எத்​தனை திட்​டங்​கள், நிதி என எது​வும் அறிவிக்​க​வில்​லை. இந்த ஆட்சி எத்​தனை நாட்​கள் நீடிக்​கும் என தெரிய​வில்லை. தவெக ஆட்​சிக்கு வந்த பிறகு சட்​டம் ஒழுங்கு சந்தி சிரிக்​கிறது. திமுக ஆட்​சி​யில் இருந்​தது போல் இந்த அரசாங்​கத்​தில் நடக்​கிறது. திருச்​சி​யில் தீர்ந்து போன கட்சி மற்​றும் சிலர் என முதல்​வர் தெரி​வித்​தார். அதி​முக தீர்ந்து போன கட்சி அல்ல, மக்​கள் குறை​களை தீர்த்து வைத்த கட்​சி. தவெக கட்சி தொடங்கி 3 ஆண்​டு​களில் மக்​களுக்கு என்ன செய்​தார்​கள்.

10 தேர்​தலில் தோல்வி கண்​ட​வர் பழனி​சாமி என திமுக தலை​வர் ஸ்டா​லின் பேசி​னார். தற்​போது, அவரே தோல்​வியடைந்​துள்​ளார். ஆட்​சி, அதி​காரம் இருக்​கும் போது ஜாக்​கிரதை​யாக பேச வேண்​டும். 4 எம்​எல்​ஏக்​கள் குதிரை பேரம் பேசி ராஜி​னாமா செய்​திருக்​கிறார்​கள். விரல் மை கூட காய்​வதற்கு முன்பு வேறு கட்​சிக்கு போயிருக்​கிறார்​கள். இந்த கட்​சிக்கு துரோகம் செய்​தவர்​களை இருபெரும் தலை​வர்​களின் ஆன்மா மன்​னிக்​காது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT