சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, இன்று மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவாயிலின் உள் பகுதியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.