தமிழகம்

அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்: இபிஎஸ் நம்பிக்கை

செய்திப்பிரிவு

மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்​டணி அதிக தொகு​தி​களில் வெற்​றி​பெற்று அதிமுக ஆட்சி அமைய தென் மாவட்ட மக்​கள் துணை நிற்​பார்​கள் என்று அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

மதுரை​யில் நேற்று நடை​பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்​டணி பொதுக்​கூட்​டத்​தில் அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: தமிழகத்​தில் உள்ள மக்​கள் விரோத ஆட்​சியை அகற்​றவே தேசிய ஜனநாயக கூட்​டணி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

          

எங்​கள் கூட்​ட​ணி​யில் மக்​கள் செல்​வாக்​குப் பெற்ற கட்​சிகள் இணைந்​துள்ன. எம்​ஜிஆர், ஜெயலலி​தாவுக்கு தென் மாவட்ட மக்​கள் பக்​கபல​மாக இருந்​தனர். எம்​ஜிஆர் அதிமுகவை தொடங்​கிய​போது திண்​டுக்​கல் மக்​கள​வைத் தேர்​தலில் வெற்​றியைக் கொடுத்து தென் மாவட்ட மக்​கள் ஆதரித்​தனர்.

அது​போல், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் அதிக தொகு​தி​களில் வெற்​றி​பெறச் செய்து அதிமுக ஆட்சி அமைவதற்கு தென் மாவட்ட மக்​கள் துணை நிற்​பார்​கள்.

மத்​திய அரசு நிதி வழங்​க​வில்லை என்று முதல்​வர் ஸ்டா​லின் அடிக்​கடி அவதூறுகளைப் பரப்​பு​கிறார். இன்று கூட தமிழகத்​துக்கு ரூ.4,500 கோடி வளர்ச்​சித் திட்​டங்​களை மோடி தொடங்கி வைத்​துள்​ளார்.

குடும்ப நலன் மட்​டுமே திமுக கட்​சி​யின் நிலைப்​பா​டாக உள்​ளது. 2ஜி ஸ்பெக்ட்​ரம் முறை​கேட்​டில் ரூ.1 லட்​சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்​தனர்.

சர்க்​காரிய கமிஷன் அறிக்​கை​யில் திமுக விஞ்​ஞான முறை​யில் ஊழல் செய்​த​தாக குறிப்​பிட்​டுள்​ளனர். கடந்த 5 ஆண்டு கால ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும்.

தென் மாவட்​டங்​களுக்கு அதிமுக ஆட்​சி​யில் பல்​வேறு திட்​டங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளன. 11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அதிமுக ஆட்​சி​யில் கொண்டு வரப்​பட்​டன. திமுக ஆட்​சி​யில் ஒரு மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட பெற முடிய​வில்​லை.

அதிமுக ஆட்​சி​யில் இருந்​த​போது​தான் ‘எய்ம்​ஸ்’ மருத்​து​வ​மனை திட்​டம் மதுரைக்​குக் கொண்டு வரப்​பட்​டது. தற்​போது இந்த மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அந்த மருத்​து​வ​மனையை வரவி​டா​மல் திமுக தடுக்க பார்த்​தது. மதுரை விமான நிலைய விரி​வாக்​கத்​துக்கு அதிமுக ஆட்​சி​யில் ‘அண்​டர் பாஸ்’ முறை​யில் முயற்​சிகளைச் செய்​தோம். தற்​போது இந்த திட்​டத்​தை​யும் தி​முக அரசு முடக்​கி வைத்​துள்​ளது.

SCROLL FOR NEXT