கோவை காந்திபுரம் சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. (அடுத்த படம்) பழனிசாமி பேச்சைக் கேட்கத் திரண்ட கூட்டம். படங்கள்: ஜெ.மனோகரன்

 
தமிழகம்

“கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நடத்தும் அரசியல் நாடகம்” - இபிஎஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கருப்​புக் கொடி போராட்​டம் என்ற பெயரில் ஸ்டா​லின் அரசி​யல் நாடகம் நடத்​துகி​றார் என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

கோவை வடக்​கு, கோவை தெற்கு மற்​றும் சிங்​காநல்​லூர் தொகுதி அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து சித்​தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை​யில் நேற்று நடந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: காற்​றில் பரவும் கரோனா வைரஸை விட கொடுமை​யானது கோவை தெற்கு தொகு​தி​யில் இன்​றைக்கு பரவி உள்​ளது. கரோனா வைரஸூக்கு மருந்து உள்​ளது. கோவை தெற்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக வேட்​பாள​ருக்கு (செந்​தில் பாலாஜி) தோல்​வியைத் தர வேண்​டும்.

5 கட்​சிகள் மாறிய அரசி​யல் வியா​பாரியை மக்​கள் நம்ப வேண்​டாம். மக்​களை நம்பி அதி​முக நிற்​கிறது. செந்​தில் பாலாஜி ஏன் கரூரில் நிற்​க​வில்​லை. கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கரூரை சுரண்டி முடித்​து​விட்​டு, தற்​போது தொழில் மாநக​ரான கோவைக்கு வந்​துள்​ளார். கருணாநிதி இருக்​கும்​போது செந்​தில்​பாலாஜி சட்​டப்​பேர​வை​யில் என்​னென்ன பேசி​னார் என்​பது இன்​ன​மும் உள்​ளது. அரக்​கனை விட கொடிய​வர் கோவை தெற்கு தொகு​தி​யில் போட்​டி​யிடு​கி​றார்.

செந்​தில் பாலாஜிக்கு ஆதர​வாக 18 சுயேச்சை பினாமிகள் போட்​டி​யிடு​கி​றார்​கள். மக்​கள் தான் நியாய​மான தீர்ப்பை வழங்க வேண்​டும். தீயசக்தி திமுகவை தமி​ழ​கத்​தில் வேரோடு அழிக்க வேண்​டும். தற்​போது தமிழ்​நாட்​டுக்​கும், டெல்​லிக்​கும் பிரச்​சினை என ஸ்டா​லின் பேசுகி​றார். ஆட்சி மாறும்​போது காட்சி மாறும். இன்​றைக்கு ஆளுங்​கட்​சிக்கு துணை​யாக இருக்​கும் அதி​காரி​கள் மீது, நடவடிக்கை எடுக்​கப்​படும். அதி​காரி​கள் உரிய முறை​யில் வேலை செய்ய வேண்​டும்.

தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக திமுக கருப்​புக்​கொடி போராட்​டத்தை கையில் எடுத்​துள்​ளது. ஆனால் கோவை​யில் எங்​கும் நான் கருப்​புக் கொடிகளை பார்க்​க​வில்​லை. தொகுதி மறு​வரையறை​யால் எந்த விதத்​தி​லும் தமி​ழ​கம் பாதிக்​காது என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தெரி​வித்​துள்​ளார். மத்​திய அரசு தொகுதி மறு​வரையறையை எவ்​வித பாதிப்​பும் இன்றி எல்லா மாநிலங்​களுக்​கும் பாரபட்​சமில்​லாமல் அரு​மை​யாக செயல்​படுத்​தும்.

இதை முன்​கூட்​டியே தெரிந்து கொண்டு மு.க.ஸ்​டா​லின் இரட்டை நிலைப்​பாட்​டுடன் போராட்​டத்தை செய்​கி​றார். தொகுதி மறு​வரையை மத்​திய அரசு வெற்​றிகர​மாக முடித்​த​பின், தான் கருப்​புக்​கொடி ஏற்​றிய போராட்​டத்​தின் காரண​மாகவே, பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு அடங்​கிய​தாக தந்​திர​மாக காட்​டிக்​கொள்​ளவே போராட்​டத்தை ஸ்டா​லின் முன்​னெடுத்​துள்​ளார்.

மத்​திய அரசு மிகத் தெளி​வாக இருக்​கிறது. நாடாளு​மன்​றத்​தில் பெண்​களுக்கு 33 சதவீத இட ஒதுக்​கீ​டால் மத்​திய அரசுக்கு பெண்​கள் மத்​தி​யில் நல்ல பெயர் கிடைத்​து​விடும் என்​பதை தடுக்​கவே ஸ்டா​லின் கருப்​புக் கொடி போராட்​டம் என்ற பெயரில் அரசி​யல் நாடகம் நடத்​துகி​றார். மத்​திய அமைச்​சர​வை​யில் திமுக இடம்​பெற்​ற​போது எந்த திட்​டங்​களும் தரவில்​லை.

இன்​றைக்கு தமி​ழ​கத்​தில் சட்​டம் ஒழுங்கு சந்தி சிரிக்​கிறது. அதி​முக ஆட்சி அமைந்த முதல் 3 மாதத்​தில் முழு​மை​யாக ஒழிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். கடந்த 5 ஆண்​டில் கோவைக்கு என்ன திட்​டங்​களை திமுக செய்​தது என பட்​டியலிட்டு சொல்ல முடி​யு​மா? இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT