எடப்​பாடி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் ஜலகண்​டாபுரத்​தில் அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி மற்​றும்​ பாமக தலை​வர்​ அன்​புமணி ராம​தாஸ்​ இணைந்​து பிரச்​சாரம்​ மேற்​கொண்டனர்.

 
தமிழகம்

“​பாமகவை உடைக்கும் முயற்சிகளை தவிடுபொடியாக்கி விட்டார்” - அன்புமணிக்கு பழனிசாமி பாராட்டு

செய்திப்பிரிவு

அதி​முகவை உடைக்க வேண்​டும் என திமுக பல அவதா​ரம் எடுத்​தது​போல், பாமகவை உடைக்க எடுத்த முயற்​சிகளை அன்​புமணி தவிடு பொடி​யாக்கி விட்​டார் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

தமிழகம் முழு​வதும் அதி​முக மற்​றும் கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்து அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சூறாவளி தேர்​தல் பிரச்​சார சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். இதனை தொடர்ந்​து, தனது சொந்த தொகு​தி​யான எடப்​பாடி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் ஜலகண்​டாபுரம், செட்​டி​மாங்​குறிச்​சி, எடப்​பாடி, கொங்​கணாபுரம் ஆகிய 4 இடங்​களில் நேற்று தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

ஜலகண்​டாபுரத்​தில் நடந்த பிரச்​சா​ரத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் பாமக தலை​வர் அன்​புமணி கலந்து கொண்​டார். கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: நான் முதல்​வ​ராக இருந்த போது என்​னென்ன பிரச்சினைகளை சந்​தித்​தேனோ, அதை அன்​புமணி ராம​தாஸ் சந்​தித்து விட்​டார். இரண்டு பேரும் பிரச்​சினை​களை சந்​தித்து விட்டு தான் உங்​களை சந்​திக்​கிறோம். அதி​முகவை உடைக்க வேண்​டும் என திமுக பல அவதா​ரம் எடுத்​தது​போல், பாமகவை உடைக்க எடுத்த முயற்​சிகளை அன்​புமணி தவிடு பொடி​யாக்கி விட்​டார். அதி​முக மற்​றும் பாமகவை வீழ்த்த முடி​யாது.

ஸ்டா​லின் எண்​ணம் எல்​லாம் நிராசை​யாகி​விட்​டது. அவர் கண்ட கனவு ஒன்​று, நடந்​தது ஒன்​று. ஸ்டா​லின் ஆட்​சிக்கு முடிவு கட்​டும் தேர்​தல் தான் இந்த தேர்​தல். ஸ்டா​லின் தன்​னுடைய மகனை உயர்ந்த இடத்​தில் அமர்த்த வேண்​டும் என நினைத்​துக் கொண்டு இருக்​கிறார். மக்​களின் நலனை பற்றி கவலைப்​ப​டாதவர் ஸ்டா​லின்.

மக்​களின் ஆதர​வுடன் தேர்​தலில் அதி​முக வெற்றி பெற்று ஆட்​சிக்கு வரும். திமுக​வின் துணை பொதுச்​செய​லா​ள​ரும், எம்​.பி.​யு​மான திருச்சி சிவா, காம​ராஜரை தரக்​குறை​வாக பேசி​யதை, ஸ்டா​லி​னால் தட்​டிக் கேட்க முடிய​வில்​லை. எல்​லா​வற்​றி​லும் கமிஷன் வரு​வ​தால் திமுக கண்டு கொள்​வ​தில்​லை. தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர் கெட்​டுள்​ளது.

தற்​போது, சட்​டப்​பேரவை தேர்​தலில் மிகப்​பெரிய வெற்​றியை தாருங்​கள். எடப்​பாடி தொகு​தி​யில் நான் நிற்​க​வில்​லை. இந்த தொகு​தி​யின் மக்​கள் தான் வேட்​பாளர்​கள். என்னை அதிக வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற வையுங்​கள். யாராக இருந்​தா​லும், எப்​போது வேண்​டு​மானலும் என்னை சந்​திக்​கக் கூடிய​வ​னாக நான் எளிமை​யாக இருக்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பிரச்​சா​ரத்​தில் அன்​புமணி பேசும்​போது, “தமிழகத்​தில் அதிக வாக்கு வித்​தி​யாசத்​தில் பழனி​சாமியை இந்த தொகு​தி​யில் வெற்றி பெற வைக்க வேண்​டும். இன்​னும் 2 வாரத்​தில் ஆட்சி மாற்​றம் நடக்​கும். பழனி​சாமி முதல்​வ​ராக வரு​வது உறு​தி. தமிழகத்​தில் உள்ள தாய்​மார்​கள், பெண்​களுக்கு பாது​காப்பு வேண்​டுமென்​றால் பழனி​சாமி முதல்​வ​ராக வர வேண்​டும். தமிழகம் முழு​வதும் நம் கூட்​டணி வெற்றி பெறும்” என்​றார்.

SCROLL FOR NEXT