படம்: சோளிங்கநல்லூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்.

 
தமிழகம்

சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

சோழிங்கநல்லூர்: சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், பனையூர், உத்தண்டி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாக்காளர்களிடம் அவர் பேசும்போது, "சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அனைத்து தரப்பினருக்கும் நன்மை செய்து வருகிறார். தொகுதியின் வளர்ச்சிக்காக என்னை இங்கு மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க உள்ளார். 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு, ரூ.8 ஆயிரம் கூப்பன் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

சொல்வதை செய்யக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். ஒவ்வொரு வீட்டுக்கும் பயனுள்ள திட்டங்களை தரும் திமுக அரசு தொடர வேண்டும். எனவே வாக்காளர்கள் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT