தமிழகம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கால சேவை குறித்து தமிழிசை எழுதிய ஆங்கில நூல்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி / சென்னை: ஆர்எஸ்எஸ் நூற்​றாண்டு கால சேவைப் பணி​கள் குறித்த ஆங்​கில நூலை பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் எழுதி உள்​ளார். இந்​நூலை, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று டெல்​லி​யில் வெளி​யிட்​டார்.

ராஷ்டிரிய ஸ்வ​யம் சேவக்​கின்​(ஆர்​எஸ்​எஸ்) நூற்​றாண்டு கால சேவைப் பணி​கள், சமூகப் பொறுப்பு மற்​றும் தேசக் கட்​டமைப்​பில் அதன் பங்​களிப்​பு​கள் தொடர்​பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ‘A Century of Service – 100 Years of the RSS in 100 Acts of Seva” (சேவை​யின் நூற்​றாண்டு – 100 சேவைச் செயல்​பாடு​களில் ஆர்​எஸ்​எஸ்​-ஸின் 100 ஆண்​டு​கள்)’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்​நூலை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வெளியிட்டு பேசி​ய​தாவது: ஓர் இயக்​கம், ஒரு நூற்​றாண்டு காலம் தொடர்ந்து சேவை செய்ய முடி​யு​மா? அது​வும் பல்​வேறு எதிர்ப்​பு​களுக்கு இடை​யிலும் தொடர்ந்து செயல்பட முடி​யு​மா? என்ற சவால்​களுக்கு இடை​யிலும் சேவை செய்து வரும் இயக்​க​மாக ஆர்​எஸ்​எஸ் திகழ்​கிறது.

ஒவ்​வொரு தேசபக்​தரின் உள்​ளத்​தி​லும் ‘சேவை’ என்ற மகத்​தான உணர்வு எவ்​வாறு உரு​வாகி, அது சமூகப் பணி​யாக வெளிப்​பட்​டது என்​பதை இந்​நூல் ஆவணப்​படுத்​தி​யுள்​ளது.

பதிவு செய்​யப்​ப​டாத நற்​செயல்​கள் காலப்​போக்​கில் மறைந்து போகக்​கூடும். அவற்றை நூல்​களாக ஆவணப்​படுத்​தி, எதிர்​கால தலை​முறைக்கு உண்​மை​யான வரலாற்றை வழங்​கு​வது அவசி​யம். சமூகத்​தின் உயர்ந்த அந்​தஸ்​தில் உள்​ளவர்​களுக்கு மட்​டுமல்​லாமல், ஏழைகள், விளிம்​புநிலை மக்​கள் மற்​றும் சமூகத்​தின் பல்​வேறு பிரி​வினருக்​கும் ஆர்​எஸ்​எஸ் சேவை செய்து வரு​கிறது.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் மக்​கள் அச்​சத்​தில் இருந்​த​போதும், ஆர்​.எஸ்​.எஸ். சேவகர்​கள் நாடு முழு​வதும் மருந்​துகள், உணவு உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை மக்​களிடம் கொண்டு சேர்த்​து, நம்​பிக்​கையை ஏற்​படுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்​தி​யா​வின் பண்​பாடு மற்​றும் பாரம்​பரி​யத்​தில் அனை​வரது நலனை​யும் கருத்​தில் கொள்​ளும் பரந்த சிந்​தனை வேரூன்​றி​யுள்​ளது. இந்​தச் சிந்​தனையை மக்​களின் மனதில் ஆழமாக பதி​யச் செய்த ஒரு மாபெரும் இயக்​க​மாக ஆர்​எஸ்​எஸ் திகழ்​கிறது.

இந்​நூல் ஆர்​எஸ்​எஸ்​ஸின் நூற்​றாண்டு கால சேவைப் பணி​களை மட்​டுமல்​லாமல், இந்​தி​யா​வின் சேவைப் பாரம்​பரி​யம், பண்​பாடு, தேசிய உணர்​வை​யும் எதிர்​கால தலை​முறைக்கு எடுத்​துச் செல்​லும் முக்​கிய​மான ஆவண​மாக அமை​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், புதுச்​சேரி உள்​துறை அமைச்​சர் ஆ.நமச்​சி​வா​யம், நூலாசிரியர் தமிழிசை சவுந்​தர​ராஜன், அல்​லயன்​ஸ் பதிப்​பகத்​தின் உரிமை​யாளர்​ சீனி​வாசன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT