தமிழகம்

மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு: மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் டிச.1-ல் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: லூப் சாலை​யில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி போக்​கு​வரத்து நெரிசலை குறைக்க உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி தொடரப்​பட்ட அவ​மதிப்பு வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்சி​யர் டிச.1-ம் தேதி ஆஜராக உத்​தர​விட்​டுள்​ளது.

மெரினா கடற்​கரை கலங்​கரை விளக்​கம் முதல் பட்​டினப்​பாக்​கம் வரை​யுள்ள லூப் சாலை​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றுமாறு சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2023, 2025-ம் ஆண்​டுகளில் தாமாக முன்​வந்து விசா​ரித்து உத்​தரவு பிறப்​பித்​தது.

ஆனால், இந்த உத்​தரவை மீறி அப்​பகுதி​யில் சாலை​யோரக் கடைகள், உணவகங்​கள் இயங்கி வரு​வ​தாகவும், இத​னால் அப்​பகுதி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படுவ​தாகவும் கூறி நொச்​சிகுப்​பத்​தைச் சேர்ந்த ஆனந்த் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், லூப் சாலை​யில் எவ்​வித போக்​கு​வரத்து இடையூறும் ஏற்​படா​மல் அதி​காரி​கள் உரிய நட​வடிக்கை எடுக்க வேண்டும் என உத்​தர​விட்​டது.

ஆனால் அந்த உத்​தரவையும் அதி​காரி​கள் மதித்து நடக்​க​வில்லை என்று ஆனந்த் உயர் நீதி​மன்​றத்​தில் அவ​மதிப்பு வழக்கு தொடர்ந்​தார்.

நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா, ஷமீம் அகமது அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனுதா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் டி.எஸ்.லவனேஷ், “லூப் சாலை​யில் நெரிசல் இன்றி வாக​னங்​கள் சீராக இயங்​கும் வகை​யில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி போக்​கு​வரத்து ஒழுங்​குபடுத்​தப்​படும் என அரசு தலைமை வழக்​கறிஞர் கடந்த ஆண்டு பிப்​ரவரி​யில் உறுதி அளித்​ததால்​ வழக்கு முடித்து வைக்​கப்​பட்​டது.

ஆனால், இன்​னும் அந்த பிரச்​னைக்கு தீர்வு காணவில்லை” என்​றார். இது​தொடர்​பாக நட​வடிக்​கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அரசு தரப்​பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்​கறிஞர் அப்​துல் ஹமீது, மாநகராட்சி, காவல் துறை, ஆட்சி​யர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் பிரசாந்த் நடராஜ், நித்யா முத்​துகுமாரசாமி, துரை குணசேகரன் தெரி​வித்​தனர்.

இதை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், இந்த அவ​மதிப்பு வழக்​கில் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர், சென்னை காவல் ஆணை​யர், ஆட்சி​யர், போக்​கு​வரத்து கூடுதல் காவல் ஆணை​யர் ஆகியோர் டிச.1-ம் தேதி ஆஜராக உத்​தர​வி்ட்டு விசா​ரணையை தள்​ளிவைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT