தமிழகம்

செங்கல்பட்டில் பொதுப்பயன்பாடு என்ற பெயரில் தனிநபர் இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பொதுப்​பயன்​பாடு என்ற பெயரில் உரிய சட்​ட​வழி​முறை​களைப் பின்​பற்​றாமல் தனி​நபரின் இடத்தை ஆக்​கிரமித்​து, அதற்கு இழப்​பீடு வழங்​காத விவ​காரத்​தில் செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர், தாம்​பரம் கோட்​டாட்​சி​யர், தாம்​பரம் வட்​டாட்​சி​யர் உள்​ளி்ட்ட 5 அதி​காரி ​கள் மீது நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி இன்று அறிக்கை தாக்​கல் செய்ய செங்​கல்​பட்டு எஸ்.பி.-க்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தைச் சேர்ந்த பேராசிரிய​ரான டாக்​டர் எம்​.ஆர்​.வசந்​தன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த மனு​வில், தனக்கு சொந்​த​மான ஆயிரத்து 318 சதுர மீட்​டர் பட்டா நிலத்தை பொதுப்​பணித்​துறை மற்​றும் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் நீர்​வழிப்​பாதை​யாக மாற்​றி​யுள்​ள​தாக​வும், எனவே தன்​னுடைய நிலத்தை மீட்டு ஒப்​படைக்க வேண்​டுமென கோரி​யிருந்​தார்.

அதன்​படி இந்த வழக்கை கடந்​தாண்டு விசா​ரித்த நீதிப​தி​கள், உரிய சட்ட நடை​முறை​களைப் பின்​பற்​றாமல் தனி​நபரின் நிலத்தை அரசு அதி​காரி​கள் ஆக்​கிரமிப்​பது என்​பது அரசி​யலமைப்பு சட்​டத்தை மீறும் செயல் என்​றும், அந்த நிலம் தற்​போது பொதுப் பயன்​பாட்​டுக்​காக பயன்​படுத்​தப்​பட்டு விட்​ட​தால் நிலத்​தின் உரிமை​யாள​ரான மனு​தா​ரருக்கு தற்​போதைய சந்தை மதிப்​பின் அடிப்​படை​யில் உரிய இழப்​பீடு நிர்​ண​யம் செய்து வழங்க வேண்​டுமென கடந்​தாண்டு பிப்​ர​வரி​யில் உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி அந்த நிலத்​துக்கு தற்​போதைய சந்தை மதிப்​பின் அடிப்​படை​யில் ரூ.2 கோடியே 90 லட்​சத்து 64 ஆயிரத்து 375-ஐ நிர்​ண​யம் செய்து அதற்கு நிர்​வாக ஒப்​புதல் பெற நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக தாம்​பரம் வட்​டாட்​சி​யர் கடந்​தாண்டு ஏப்​ரலில் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி. ஜெயச்​சந்​திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.பி.செங்​கோட்​டு​வேல், அந்த நிலத்​துக்​கான இழப்​பீட்​டுத்​தொகையை நிர்​ண​யம் செய்து ஓராண்டு 4 மாதங்​கள் ஆகி​யும் இன்​னும் அந்த தொகையை அதி​காரி​கள் மனு​தா​ரருக்கு வழங்​க​வில்​லை, என குற்​றம் சாட்​டி​னார்.

அதற்கு அரசு தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​.ஹஷ்வந்த் இதுதொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய அவகாசம் கோரி​னார். அதையேற்க மறுத்த நீதிப​தி​கள், அதி​காரி​களி்ன் இந்த செயலுக்கு கண்​டனம் தெரி​வித்​தனர்.

மேலும் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், அரசி​யலமைப்பு சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்டு அதி​காரி​கள் அதி​கார துஷ்பிரயோகத்​தில் ஈடு​படு​வதற்கு இந்த வழக்கு மிகச்​சிறந்த உதா​ரணம். பொதுப்​பயன்​பாடு என்ற பெயரில் உரிய சட்ட நடை​முறை​களைப் பின்​பற்​றாமல் தனி​யாருக்கு சொந்​த​மான நிலத்தை ஆக்​கிரமித்​தது முதலில் தவறு.

பின்​னர் அந்த நிலம் பொதுப் பயன்​பாட்​டுக்கு வந்​து​விட்​டது எனக்​கூறிய​தால் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுப்​படி அந்த நிலத்​துக்கு உரிய இழப்​பீட்டை மாதக்​கணக்​கில் வழங்​காமல் கால​தாமதம் செய்​யும் அதி​காரி​களின் செயல் கடும் கண்​டனத்​துக்​குரியது.

எனவே செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர், தாம்​பரம் வரு​வாய் கோட்​டாட்​சி​யர், தாம்​பரம் வட்​டாட்​சி​யர், நீர்​வளத் துறை உதவி செயற்​பொறி​யாளர் மற்​றும் வட்​டார வளர்ச்சி அலு​வலர் ஆகியோர் மீது மனு​தா​ரர் செங்​கல்​பட்டு மாவட்ட எஸ்.பி.​யிடம் தனி​நபர் புகார் அளி்க்க வேண்​டும்.

அந்​தப்​பு​கார் மீது எஸ்.பி. நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மேலும், இதுதொடர்​பாக எடுக்​கப்​பட்ட நடவடிக்கை தொடர்​பாக செங்​கல்​பட்டு எஸ்.பி. இன்று (செப்​.3-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு உயர் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​ய​வேண்​டும்​, என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT