மேகமலை | கோப்புப் படம் 

 
தமிழகம்

ஆக்கிரமிப்பு விவகாரத்தில் முன்னிறுத்தப்படும் மேகமலை: தொழிற்சங்கங்கள் ஆதங்கம்

என்.கணேஷ்ராஜ்

வருசநாடு: வருசநாடு பகுதியில்தான் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஆனால், மேகமலை பெயர் முன்னிறுத்தப்படுவதால் இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சார்ந்த கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன கிராமங்களில் அடுத்தடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து உட்பிரையர் தேயிலை தோட்ட தொழிற்சங்க நிர்வாகி முத்தையா கூறுகையில், “மேகமலையைப் பொறுத்தளவில் பட்டா இடத்தில்தான் தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இருப்பினும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என்ற பெயரில் வழக்கு உள்ளதால் மேகமலை என்ற பெயர் முன்னிறுத்தப்படுகிறது.

மேகமலையை ஆக்கிரமிப்பு பகுதி என்று பலரும் கூறுவதால் இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சநிலையில் உள்ளனர்” என்றார்.

வருவாய் மற்றும் வனத்துறையினர் கூறுகையில், “மேகமலை பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆனால் வருசநாடு, மயிலாடும்பாறை வனச்சரகத்துடன் ஒப்பிடுகையில் இங்கு குறைவுதான்” என்றனர்.

SCROLL FOR NEXT