தமிழகம்

மின்துறை அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும்: மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் ஜெயசங்​கர் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சட்​டப்​பேர​வை​யில் மானிய கோரிக்​கை​யின் போது தூத்​துக்​குடி​யில் சூப்​பர் கிரிட் தெர்​மல் நிலை​யம் அரசு, தனி​யார் பங்​களிப்​புடன் தொடங்​கப்​படும் என முதல்​வர் அறி​வித்​துள்​ளார்.

அதே​போல், எண்​ணூர் அனல் மின் நிலை​ய​மும் தனி​யார், அரசு பங்​களிப்பு மூலம் தொடங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், கேரளா போல கேப்க்ஸ் ஸ்மார்ட் மீட்​டர் திட்​டத்தை செயல்​படுத்​தாமல், மின்​விநி​யோக பணி​களை​யும், மின் கணக்​கீட்டு பணி​களை​யும் - தரவு​களை​யும் தனி​யாரிடம் ஒப்​படைக்​கும் வகை​யில் டோடெக்ஸ் ஸ்மார்ட் மீட்​டர் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், மின்​சார வாரி​யத்​தில் ஐந்​தாண்டு ஒப்​பந்த முறை​யில் 10 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்படுவர் என கூறப்​பட்​டுள்​ளது. இந்த அறி​விப்​பு​கள் மின்​சார வாரி​யம் தனி​யார் மையத்தை நோக்கி செல்​வதை உணர்த்​துகிறது.

இந்த அறி​விப்​பு​களை திரும்​பப் பெற வேண்​டும். மின் துறையை தனி​யார் பாதைக்கு கொண்டு செல்​லும் முடிவு கண்​டிக்​கத்​தக்​கது. எனவே, அரசின் இந்த அறி​விப்​பு​களை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் இல்​லை​யெனில், மிகப்​பெரிய அளவில் போ​ராட்​டத்தை நடத்​து​வோம். இவ்​வாறு ஜெயசங்​கர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT