தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பத்மராஜன்.

 
தமிழகம்

தாராபுரம் தொகுதியில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்

256-வது முறையாக களம் இறங்குகிறார்

செய்திப்பிரிவு

தாராபுரம்: ​திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்​பேரவைத் தொகுதிக்கான இடைத்​தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்​கியது.

‘தேர்தல் மன்னன்’ என அழைக்​கப்​படும் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த கே.பத்​ம​ராஜன் முதல் நபராக வந்து, தாராபுரம் கோட்டாட்​சி​யரிடம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடந்த 1988-ம் ஆண்டு முதல் இடைவிடாது தேர்தல் களத்தில் இயங்கிவரும் பத்மராஜன், உள்ளாட்சித் தேர்தல் முதல் சட்டப்​பேரவை, மக்களவை, மாநிலங்களவை மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை அனைத்து தேர்தல்​களிலும் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்து வருகி​றார்.

உலகிலேயே அதிக தேர்தல்​களில் போட்டி​யிட்டு தோல்வியடைந்தவர் என்ற விசித்​திரமான சாதனைக்காக இவரது பெயர் ‘லிம்கா’ சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்​றுள்ளது.

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் மேட்டூர் தொகுதியில் 254-வது முறையாக மனு தாக்கல் செய்த இவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநிலங்களவை இடைத்​தேர்​தலிலும் போட்டி​யிட்​டார்.

முன்னாள் முதலமைச்​சர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, மு.க.ஸ்​டா​லின், க.பழனி​சாமி, தேசிய தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி, பி.வி.நரசிம்ம ராவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை எதிர்த்தும் போட்டி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து பத்மராஜன் கூறும்​போது, “1996-ல் ஒரே நேரத்தில் 5 மாநிலங்​களில் வேட்பு மனு தாக்கல் செய்தேன். இதுவரை தேர்தல்​களுக்காக ரூ.1 கோடிக்கும் மேல் செலவிட்​டுள்​ளேன். 2011-ல் மேட்டூர் தொகுதியில் பெற்ற 6,700 வாக்குகளே நான் பெற்ற அதி​கபட்ச வாக்​கு​கள்” என்​றார்.

SCROLL FOR NEXT