கோப்புப் படம்

 
தமிழகம்

தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை: உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற பணம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் பறக்​கும் படை​யினர் மேற்​கொண்ட சோதனை​யில் மெரினா உட்பட 3 இடங்​களில் லட்​சக்​கணக்​கில் பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது.

தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் நேற்று முன்​தினம் மாலை முதல் அமலுக்கு வந்​துள்​ளன. இதையடுத்​து, அரசி​யல் கட்​சிகள், பணம் கொடுத்து வாக்​காளர்​களை கவர்​வதைதடுக்க தேர்​தல் ஆணை​யம் பறக்​கும் படைகளை அமைத்​துள்​ளது.

          

இந்த பறக்​கும் படை​யினர் முக்​கிய பகு​தி​களில் கண்​காணித்து வரு​கின்​றனர். அதன்​படி, மெரினா காம​ராஜர் சாலை​யில் அகில இந்​திய வானொலி நிலை​யம் முன்பு சென்னை சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி சட்​டப்​பேரவை தொகுதி பறக்​கும் படை பொறுப்​பாளர் உதவி செயற்​பொறி​யாளர் திலக் தலை​மை​யில் நேற்று மாலை கண்​காணித்​தனர்.

அப்​போது, அந்த வழி​யாக வந்த கார் ஒன்றை மறித்து சோதித்​த​போது உரிய ஆவணங்​கள் இல்​லாமல் அதில் ரூ.1.29 லட்​சம் இருந்​தது தெரிந்​தது. அதை பறக்​கும் படை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

விசா​ரணை​யில் காரை ஓட்டி வந்த நபர் மயி​லாப்​பூரை சேர்ந்த கார்த்​திக் என்​பதும், கட்​டு​மான பணிக்​காக அந்த பணத்தை கொண்டு சென்​றதும் தெரிய​வந்​தது. இதே​போல், வில்​லி​வாக்​கம் தொகு​தி​யில் ரூ.1.16 லட்​சம், எழும்​பூர் தொகு​தி​யில் ரூ.55 ஆயிரம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

உரிய ஆவணங்​கள் இல்​லாமல் ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் பணம் கொண்டு சென்​றால் பறி​முதல் செய்​யப்​படுகிறது.

SCROLL FOR NEXT