நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன்.

 
தமிழகம்

வாக்குறுதிகளுடன் வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு வேட்டை: அம்பத்தூரில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி அம்​பத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் வேட்பாளர்கள், அறி​முகக் கூட்​டங்​கள், தலை​வர்​களின் சந்​திப்​பு, நேரடி வாக்​குச் சேகரிப்பு என தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்தி உள்​ள​தால் தேர்​தல் களம் சூடு​பிடித்​துள்​ளது.

திமுக சார்​பில் களம் காணும் அ.பு. பூர்​ணி​மா​வின் வேட்​பாளர் அறி​முகக் கூட்​டம், ஏப்​.1-ம் தேதி அம்​பத்​தூர் வடக்கு பகுதி தேர்​தல் பணிமனை​யில் நடை​பெற்​றது. அவர் கூட்​டணி கட்​சித் தலை​வர்​களைச் சந்​தித்து ஆதரவு திரட்டி வரு​கிறார்.

          

அந்த வகை​யில் தி.க. தலை​வர் கி.வீரமணி, முன்​னாள் அமைச்​சர் ஆற்​காடு நா.வீ​ரா​சாமி ஆகியோரை நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். வேட்​புமனுத் தாக்​கல் செய்​த​பின், தொகுதி முழு​வதும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளார்.

அதி​முக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிடும் பாமக வேட்​பாளர் கே.என்​.சேகரின் அறி​முகக் கூட்​டம் ஏப். 1-ம் தேதி கொரட்​டூரில் நடை​பெற்​றது.

அவர் தனது வேட்​புமனு​வைத் தாக்​கல் செய்த நிலை​யில், இன்று அம்​பத்​தூர் ராக்கி திரையரங்​கம் அருகே நடை​பெறும் கூட்​டத்​தில் பாமக தலை​வர் அன்​புமணி பங்​கேற்​று, கே.என்​.சேகரின் தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்கி வைக்​கிறார்.

தவெக வேட்​பாளர் ஜி. பால​முரு​கன், வேட்​புமனு தாக்​கலுக்கு பிறகு வாக்​குச் சேகரிப்​பில் மும்​முர​மாக ஈடு​பட்டு வரு​கிறார். மண்​ணூர்​பேட்​டை​யில் பணிமனையைத் தொடங்​கி​யுள்ள அவர், அண்ணா நகர் மேற்கு மில்​லினி​யம் பூங்​கா​வில் நடைப்​ப​யிற்சி மேற்​கொண்ட மக்​களிடம் கலந்​துரை​யாடி ‘விசில்’ சின்​னத்​துக்கு ஆதரவு கோரி​னார்.

மேலும், பாடி பகு​தி​யில் தொழுகை முடித்து வந்த இஸ்​லாமிய மக்​களை சந்​தித்​து, துண்டு பிரசுரங்​களை வழங்கி வாக்​குச் சேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

அதே​போல், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் தெ.க. சிலம்​பரசன், தனது கட்​சித் தொண்​டர்​களு​டன் வீதி வீதி​யாகச் சென்று பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

கட்​சி​யின் தேர்​தல் வாக்​குறு​தி​களை எடுத்​துக்​கூறி, நாம் தமிழர் கட்​சிக்கு வாக்கு சேகரிப்​பது குறிப்​பிடத்​தக்​கது. வேட்பாளர்கள் அனை​வரும் பிரச்​சா​ரம் செய்ய தொடங்​கி​யுள்​ளதை அடுத்து அம்​பத்​தூர் தொகு​தி​யில் தேர்​தல்​ களம்​ களை​கட்​ட தொடங்​கியுள்​ளது.

SCROLL FOR NEXT