சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள் செய்யப்பட்ட பேருந்தை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் ரிப்பன் மாளிகையில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து சேவை

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்த தேர்​தல் விழிப்​புணர்வு கண்​காட்சி பேருந்து சேவையை மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் நேற்று தொடங்​கி​ வைத்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 100 சதவீதம் வாக்​களிப்​ப​தன் அவசி​யம் குறித்​து, வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், “தேர்​தல் திரு​விழா – தமிழ்​நாட்​டின் பெரு​விழா” எனும் தேர்​தல் விழிப்​புணர்வு கண்​காட்​சிப் பேருந்து மற்​றும் வாக​னங்​கள் சேவை தொடக்க விழா ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

          

இதில் சென்னை மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் பங்​கேற்று விழிப்​புணர்வு வாகன சேவையை கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.

இந்த பேருந்து சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 தொகு​தி​களி​லும் பொது​மக்​கள் அதி​கம் கூடுமிடங்​களில் நிறுத்​தப்​பட்​டு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும்.

தவெக பிரச்​சா​ரம்:

நிகழ்ச்​சி​யின் முடி​வில் குமரகுருபரன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தவெக​வினர் வரும் மார்ச் 28-ம் தேதி பெரம்​பூர் பகு​தி​யில் 4, 5 இடங்​களில் பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி கேட்​டுள்​ளனர்.

மக்​கள் கூடும் இடங்​கள் என்​ப​தால் காவல்​துறை ஆலோ​சனை​யுடன், விதி​முறை​களுக்​குட்​பட்டு அனு​மதி வழங்​கப்​படும்” என்​றார்.

SCROLL FOR NEXT