பிரதிநிதித்துவப்படம்

 
தமிழகம்

மதுரை: ஜல்லிக்கட்டில் காளை முட்டி முதியவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மேல அனுப்​பானடி வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​புப் பகு​தி​யைச் சேர்ந்​தவர் செல்​வ​ராஜ் (68). இவர் கடந்த 16-ம் தேதி பாலமேடு ஜல்​லிக்​கட்​டுப் போட்​டியைப் பார்க்​கச் சென்​றார். காளை​கள் சேகரிப்​புப் பகுதி அருகே நின்று வேடிக்​கைப் பார்த்​தார்.

அப்​போது, வாடி​வாசலில் இருந்து வந்த காளை அவரை முட்​டித் தள்​ளியது. இதில் காயமடைந்த செல்​வ​ராஜ் முதலுதவிக்​குப் பிறகு மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்​தினம் இரவு உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக பாலமேடு போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்​.

SCROLL FOR NEXT