சென்னை: எல்நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அறிவியல் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு நிபுணர் குழு அமைத்தது.
இந்தக் குழு தனது முதல்கட்ட பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியுள்ளது. அதில் ‘எல்நினோவை வறட்சியுடன் மட்டும் தொடர்புபடுத்தாமல், கனமழை, வெள்ளம், புயல் மற்றும் கடும் வெப்பம் உட்பட பல்வேறு பேரிடர்களை கருத்தில் கொண்டு தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஆறுகள், கால்வாய்கள், குளங்களை தூர்வார வேண்டும். நிவாரண மையங்களை அமைத்து, அவசரகால தொடர்பு, எச்சரிக்கை தகவல்களை காட்சிப்படுத்த வேண்டும்’ உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.