தமிழகம்

போர் பதற்றத்தால் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முடங்கியது: தினமும் ரூ.5 கோடி இழப்பு

கோழிப்பண்ணையாளர்கள் கவலை

செய்திப்பிரிவு

நாமக்கல்: மேற்​காசிய நாடு​களில் நில​வும் போர் பதற்​றத்தால் நாமக்கல் பகு​தி​யில் கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வரு​கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்​படு​வ​தால் கோழிப்​பண்​ணை​யாளர்​கள் பெரும் பாதிப்​புக்​குள்​ளாகி​யுள்​ளனர்.

இந்​தி​யா​வில் முட்டை உற்​பத்தியில் தமிழகம் 2-ம் இடம் வகிக்​கிறது. இங்கு நாள் ஒன்​றுக்கு சுமார் 7 கோடி முட்​டைகள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. வெளி​நாடு​களுக்கு முட்டைஏற்​றுமதி செய்​வ​தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்​கிறது. நாமக்​கல் மண்​டலத்​தில் இருந்து மட்​டும் நாள் ஒன்​றுக்கு சுமார் 60 லட்​சம் முதல் 80 லட்​சம் முட்​டைகள் ஏற்றுமதி செய்​யப்​படு​கின்​றன. வளை​குடா நாடு​களான ஐக்​கிய அரபு நாடு​கள், கத்​தார், ஓமான், குவைத் உள்​ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதிசெய்​யப்​பட்டு வந்​தது.

          

தற்​போது இந்த நாடு​களில் நில​வும் போர் பதற்​றத்​தால் கப்​பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டு, முட்டை ஏற்​றுமதி முழு​மை​யாக தடைபட்​டுள்​ளது. மத்​திய கிழக்கு நாடு​களில் வான்​வழி கட்​டுப்​பாடு​கள் காரண​மாக விமானம் மூலம் முட்டை ஏற்​றுமதி செய்​ய​வும் இயலாத நிலை உள்​ளது. அதனால் முட்​டைகள் அனைத்​தும் தற்​போது உள்​ளூர் சந்​தைக்கு திருப்பி விடப்​பட்​டுள்​ள​தால் முட்டை விலை வீழ்ச்​சி​யடைந்து வரு​கிறது. கடந்த மாதம் ஒரு முட்​டை​யின் பண்​ணைக்​கொள்​முதல் விலை 540 பைசா​வாக இருந்​தது. இது தற்​போது 405 பைசா​வாக உள்​ளது.

ஒரு முட்டை உற்​பத்தி செய்ய 450 பைசா செலவு ஆகிறது. இச்​சூழலில் 400 பைசாவுக்​கும் குறை​வாக விற்​பனை செய்​தால் ஒரு முட்​டைக்கு சுமார் 50 பைசா வுக்கு மேல் இழப்பு ஏற்​படு​கிறது. இதனால் நாமக்​கல் மண்​டலத்​தில் கோழிப்​பண்​ணைத் தொழிலில் நாள் ஒன்​றுக்கு ரூ. 5 கோடி வரை நஷ்டம் ஏற்​படு​கிறது.

அதேவேளை​யில் போர் நீடிக்​கும்​பட்​சத்​தில் தீவன மூலப்​பொருட்​களின் விலை​யும் உயரும் அபா​யம் உரு​வாகி​யுள்​ளது. இது ​பண்​ணை​யாளர்​களைகவலை​யடைச் செய்துள்​ளது.

இதுகுறித்து அவர்​கள் கூறுகை​யில், மத்​திய கிழக்கு ஆசிய நாடு​களில் நில​வும் போர் காரண​மாக முட்டை ஏற்​றுமதி முற்​றி​லு​மாக முடங்​கி​யுள்​ளது. இந்​தி​யா​வில் இருந்து இது​வரை ஏற்​றுமதி நடை​பெறாத தென் கிழக்கு ஆசிய நாடு​கள், ஆப்​பிரிக்க நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்ய மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்​றனர்​.

SCROLL FOR NEXT