தமிழகம்

பதிவுப் பட்டியலில் இருந்து தமமுக, மமக உள்ளிட்ட கட்சிகளை நீக்கிய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் ஆணை

செய்திப்பிரிவு

சென்னை: தம​முக, மமக உள்​ளிட்ட கட்​சிகளை பதிவுப் பட்​டியலில் இருந்து நீக்கி தேர்​தல் ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதிக்க முடி​யாது என உயர் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

நாடு முழு​வதும் கடந்த 6 ஆண்டாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யிடாத, செலவு கணக்கை தாக்​கல் செய்​யாத, தேர்​தல் ஆணைய விதி​களை மீறிய 474 அரசி​யல் கட்​சிகளை, பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகள் பட்​டியலில் இருந்து நீக்கி இந்​திய தேர்​தல் ஆணை​யம் கடந்த 2025 செப்​.19-ம் தேதி உத்​தர​விட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் 42 கட்​சிகளின் பதிவு நீக்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்து தமிழக மக்​கள் முன்​னேற்​றக் கழகம், மனிதநேய மக்​கள் கட்சி உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு​கள் தொடரப்​பட்​டன.

          

அந்த மனுவில், ‘தேர்தல்களில் கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் இணைந்து நாங்​கள் போட்​டி​யிட்​டதை கருத்​தில் கொள்​ளாமல், பதிவு பட்​டியலில் இருந்து நீக்​கியது சட்​ட​விரோதம். எனவே, தேர்​தல் ஆணையத்தின் உத்​தர​வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்​டும்’ என்று கோரப்​பட்​டிருந்​தது.

தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன், எஸ்​.பிர​பாகரன், என்​.எல்​.​ராஜா, ஆர்​.ஸ்​ரீனி​வாஸ் மற்​றும் வழக்​கறிஞர் அபிஷா ஐசக், ஏ.ஜான் வின்​சென்ட், கே.க​வுதம் கு​மார் உள்​ளிட்​டோர் ஆஜராகினர். ‘6 ஆண்​டு​களாக தேர்​தலில் போட்​டி​யி​டாத கட்​சிகளை பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகள் பட்​டியலில் இருந்து நீக்க வகை செய்​யும் விதி​கள் கடந்த 2014-ம் ஆண்​டு​தான் அமலுக்கு வந்​தது. அதற்கு முன்​பாக தொடங்​கப்​பட்ட கட்​சிகளுக்கு அந்த விதி​கள் பொருந்​தாது. தவிர, அது​போன்ற உத்​தரவை தேர்​தல் ஆணை​யர்​கள்​தான் பிறப்​பிக்க முடி​யும். தேர்​தல் ஆணைய செயலர் பிறப்​பிக்க முடி​யாது. மேலும், அங்​கீ​காரத்தை மட்​டுமே ஆணை​யம் ரத்து செய்ய முடி​யும். பதிவை நீக்க முடி​யாது என்​ப​தால் அந்த உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும்’ என வாதிட்​டனர்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜி.​ராஜகோ​பாலன், ‘‘தேர்​தல் ஆணைய விதி​களின்​படி, 6 ஆண்​டு​களாக தேர்​தலில் போட்​டி​யிட​வில்லை என்​றாலும், தேர்​தல் செலவு கணக்​கு​களை முறை​யாக தாக்​கல் செய்​ய​வில்லை என்​றாலும், சம்பந்தப்பட்ட ​கட்​சிகளை பதி​வில் இருந்து நீக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு முழு அதி​காரம் உள்​ளது’’ என்று வாதிட்​டார்.

இதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பான தேர்​தல் ஆணைய உத்​தர​வுக்கு தடை வி​திக்க முடி​யாது என மறுப்பு தெரி​வித்​து, வி​சா​ரணை​யை மார்ச்​ 2-வது வாரத்​துக்​கு தள்​ளி​வைத்​தனர்​.

SCROLL FOR NEXT