தமிழகம்

ஏஐ மூலம் தேர்தல் பதிவுகளை உருவாக்கினால் சமூக ஊடகத்தில் அதை குறிப்பிட வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

விதிகளை மீறி உருவாக்கப்பட்ட 11 ஆயிரம் பதிவுகள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தல் தொடர்​பான பதிவு​களை ஏஐ-​யில் உரு​வாக்​கி​னால், அதை அந்த பதி​வில் குறிப்​பிடவேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. விதி​களை மீறி பதி​விட்ட 11 ஆயிரம் பதிவு​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தகவல் தொழில்​நுட்​பச் சட்​டம்​-2000, தகவல் தொழில்​நுட்ப விதி​கள்​-2021 மற்​றும் தேர்​தல் நடத்தை விதி​கள் உள்​ளிட்ட நடை​முறை​யில் உள்ள சட்ட விதி​களுக்கு இணங்க, அனைத்து பங்​கு​தா​ரர்​களும் சமூக ஊடகங்​கள் மற்​றும் டிஜிட்​டல் தளங்​களை பொறுப்​பான மற்​றும் நெறி​முறை சார்ந்த முறை​யில் பயன்​படுத்​து​வதை உறுதி செய்ய வேண்​டும் என்று இந்​திய தேர்​தல் ஆணை​யம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

தவறான அல்​லது சட்​ட​விரோத​மான ஏஐ-மூலம் உரு​வாக்​கப்​பட்ட, திருத்​தப்​பட்ட உள்​ளடக்​கங்​கள் குறித்து சமூக ஊடக தளங்​களின் கவனத்​துக்கு கொண்டு வரப்​பட்ட 3 மணி நேரத்​துக்​குள் அவற்​றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. அரசி​யல் கட்​சிகள், வேட்​பாளர்​கள் மற்​றும் தேர்​தல் பிரச்​சா​ரப் பிர​தி​நி​தி​கள், பிரச்​சா​ரத்​துக்​காக பயன்​படுத்​தப்​படும் செயற்​கை​யாக உரு​வாக்​கப்​பட்ட அல்​லது ஏஐ மூலம் மாற்​றப்​பட்ட எந்​தவொரு உள்​ளடக்​க​மும், வெளிப்​படைத்​தன்​மை.

வாக்​காளர் நம்​பிக்​கையை பேணுவதற்​காக ‘ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்​டது’, ‘டிஜிட்​டல் முறை​யில் மேம்​படுத்​தப்​பட்​டது’, ‘செயற்கை உள்​ளடக்​கம்’ என தெளி​வாக அடை​யாளப்​படுத்​துவதை​யும், அதை உரு​வாக்​கிய அமைப்​பின் விவரத்​தை​யும் வெளி​யிடு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

தமிழகம் உள்​ளிட்ட மாநிலங்​களில் நடை​பெற்று வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களில், நடத்தை விதி​களை மீறும் வகையி​லான பதிவு​கள், சட்​டம் ஒழுங்​கைச் சீர்​குலைக்​கக்​கூடிய அல்​லது சீர்​குலைக்​கும் திறன் கொண்ட சமூக ஊடகப் பதிவு​கள், வாக்​குப்​ப​திவு செயல்​முறைக்​கோ. தேர்​தல் இயந்​திரங்​களுக்கோ எதி​ராக பரப்​பப்​படும் தவறான தகவல்​கள் போன்ற சமூக ஊடக உள்​ளடக்​கங்​கள், தகவல் தொழில்​நுட்​பச் சட்​டத்​தின்​கீழ் அறிவிக்​கப்​பட்ட சம்​பந்​தப்​பட்ட மாநிலத் தகவல் தொழில்​நுட்ப ஒருங்​கிணைப்பு அதி​காரி​களால் கண்​காணிக்​கப்​பட்டு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, 2026 மார்ச் 15-ம் தேதி தேர்​தல் அறிவிக்​கப்​பட்​ட​தில் இருந்​து, இது​போன்ற 11 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சமூக ஊடகப் பதிவு​கள், இணைய முகவரி​கள் கண்​டறியப்​பட்​டு, உள்​ளடக்​கங்​களை நீக்​கியதுடன், உரிய சட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. மார்ச் 15 முதல் ஏப்​ரல் 19 வரை, சிவிஜில் செயலியைப் பயன்​படுத்தி 3,23,099 புகார்​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இவற்​றில் 3,10,393 புகார்​கள் தீர்க்​கப்​பட்​டுள்​ளன என்று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT