தமிழகம்

வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்: மின்வாரியம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வயது சான்​றிதழ் இல்​லாத பணி​யாளர்​கள் மருத்​துவ வாரி​யத்​திடம் இருந்து வயது சான்​றிதழ் கட்டாயம் பெற வேண்​டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்​ளது.

மின்வாரியம் அல்​லது எந்த ஒரு அரசுத்​துறை நிறு​வனங்​களில் பணி​யில் சேர்ந்​தா​லும் கல்​வி, வயது உள்​ளிட்​ட​வற்​றுக்​கான பல்​வேறு ஆவணங்​கள் கேட்​கப்​படும்.

அதில் பணி​யாளரின் வயதை உறுதி செய்ய வயது சான்று கேட்​கப்​படும். பொது​வாக இதற்கு பிறப்​புச் சான்​றிதழ், 10-ம் வகுப்பு மதிப்​பெண் சான்​றிதழ் ஆகியவை வழங்​கப்​படும். இது பணி​யாளரின் பணிக்​காலம் மற்​றும் அவரின் ஓய்வு வயதை தீர்​மானிக்க கேட்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் மின்​வாரி​யத்​தில் தற்​போது பணி​யில் இருப்​பவர்​களில் சிலர் முறை​யான வயது சான்​றிதழ் சமர்ப்​பிக்​காமல் பணி​யில் சேர்ந்​துள்​ள​தாக​வும், அந்த பணி​யாளர்​கள் மருத்​துவ வாரி​யத்​திடம் இருந்து வயது சான்​றிதழ் பெற்று சமர்​ப்பிக்க வேண்​டும் என மின்வாரியம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து மின்வாரியம் பிறப்​பித்த உத்​தர​வு: அனைத்து தலைமை பொறி​யாளர்​கள் மற்​றும் மேற்​பார்வை பொறி​யாளர்​கள் அரசு வழங்​கிய வழி​முறை​கள் படி மருத்​துவ வாரி​யம் பணி​யாளர்​களுக்கு வயது சான்​றிதழ் வழங்​கு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

அதன்​படி, மருத்​து​வக் குழு​வில் பொது மருத்​து​வர், தடய​வியல் அறி​வியல் மருத்​து​வர், கதிரியக்​க​வியல் மருத்​து​வர் இடம் பெற வேண்​டும், மேலும் சரி​யான வயதை கண்​டறிய மண்டை ஓட்டை சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்​டும்.

இந்த மருத்​துவ செல​வு​களை மின்வாரியம் ஏற்​றுக்​கொள்​ளும். பரிசோதனை முடி​வில் கிடைக்​கும் வயது துல்​லிய​மாக இருக்​காது என்​ப​தால் அதி​கபட்​ச​மாக 2 முதல் 5 வயதுக்​கும் மட்​டுமே வித்​தி​யாசம் இருக்க வேண்​டும்.

அதி​லும் குறைந்த வயதையே எடுத்​துக்​கொள்ள வேண்​டும். உதரண​மாக பரிசோதனை முடி​வில் வயது 51 முதல் 54 வரை இருந்​தால் அதில் குறைந்த அளவான 51-ஐ எடுத்​துக்​கொள்ள வேண்​டும்.

SCROLL FOR NEXT