4500 மெகா​ வாட்

 

படம்: எல்.சீனிவாசன்

தமிழகம்

தனி​யாரிடம் இருந்து 4,500 மெகா​வாட் வாங்க டெண்​டர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அதி​கரித்து வரும் மின்​தேவையை சமாளிக்​க​வும், மின்​வெட்​டைத் தவிர்க்​க​வும் வெளிச்​சந்​தை​யில் இருந்து 4,500 மெகா​வாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய மின்​சார வாரி​யம் டெண்​டர் கோரி​யுள்​ளது.

தமிழகத்​தில் கோடை காலத்​தைத் தொடர்ந்து செப்​டம்​பர் மாதத்​தி​லும் வெப்​பத்​தின் தாக்​கம் அதி​க​மாக இருந்​த​தால் மின்​சா​ரத் தேவை பன்​மடங்கு அதி​கரித்​தது. கடந்த செப்​டம்​பர் மாதத்​தில் மட்​டும் வெளிச்​சந்​தை​யில் ஒரு யூனிட்​டுக்கு சராசரி​யாக ரூ.20 வரை செலுத்தி மின்​சா​ரம் வாங்​கப்​பட்​ட​தாக மின்​சா​ரத் துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தெரி​வித்​திருந்​தார். மேலும், கூடு​தலாக 1,500 மெகா​வாட் மின்​சா​ர​மும் குறுகிய கால அடிப்​படை​யில் கொள்​முதல் செய்​யப்​பட்​டது.

மத்​திய மின்​துறை வெளி​யிட்​டுள்ள கணிப்​பு​களின்​படி, வரும் 2026- 27ம் நிதி​யாண்​டில் தமிழகத்​தின் உச்ச மின்​தேவை 23,314 மெகா​வாட் வரை அதி​கரிக்​கும் எனத் தெரி​கிறது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் அதி​கரித்து வரும் மின் வெட்டை சமாளிக்க மின்​சா​ரத்தை வெளி சந்​தை​யில் இருந்து கொள்​முதல் செய்ய மின்​சார வாரி​யம் டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது. 4,500 மெகா​வாட் மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்ய டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது. வரும் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4,500 மெகா​வாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யப்பட உள்​ளது.

பீக் ஹவர்ஸ் எனப்​படும் மாலை 6 மணி - நள்​ளிரவு 12 மணி வரை தேவை​யான 3,000 மெகா​வாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்யப்பட உள்​ளது. நள்​ளிரவு 12 மணி முதல் அதி​காலை 2 மணி வரை தேவை​யான 1,500 மெகா​வாட் மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்ய உள்​ளனர். நுகர்​வோருக்கு தடையற்ற மின்​சா​ரம் வழங்கவும், நிதி இழப்​பைத் தவிர்க்​க​வும் நீண்​ட​கால மின் கொள்முதல் ஒப்​பந்​தங்​கள் மூலம் நிலை​யான விலை​யில் மின்சாரத்​தைப் பெறு​வதற்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும் என மின்​துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் தமிழ்​நாடு சூரிய ஆற்​றல் மேம்​பாட்​டாளர்​கள் சங்​கம் சார்​பில் தமிழ்​நாடு சூரிய மேற்​கூரை திட்​டம் மற்​றும் எதிர்​கால பசுமை ஆற்​றல் தொடர்​பான சிறப்பு கருத்​தரங்​கம் மற்​றும் கலந்​துரை​யாடல் நடை​பெற்​றது. கண்​காட்சி அரங்கை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் திறந்து வைத்​தார்.

SCROLL FOR NEXT