தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: பக்தர்களிடம் வசூலித்த ரூ.59,600 பறிமுதல்

செய்திப்பிரிவு

சாத்தூர்: இருக்​கன்​குடி மாரியம்​மன் கோயி​லில் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தில் பக்​தர்​களிடம் முறைகேடாக வசூலிக்​கப்​பட்ட ரூ.59,600 பறி​முதல் செய்​யப்​பட்​டது.

விருதுநகர் மாவட்​டம் இருக்​கன்​குடி​யில் உள்ள மாரியம்​மன் கோயில் பிரசித்தி பெற்​றது. இங்கு முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தில் பக்​தர்​களிடம் முறைகேடாகவும் கட்​டாயப்​படுத்​தி​யும் பணம் வசூல் செய்​வ​தாக புகார் எழுந்​தது. அத்​துடன், கோயி​லில் அண்​மையில் ரூ.60 கோடி​யில் திருப்​பணிகள் மேற்​கொள்​ளப்​பட்​டதிலும் முறைகேடுகள் நடந்​துள்​ள​தாக புகார்​கள் எழுந்​தன.

அதையடுத்து, விருதுநகர் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு டிஎஸ்பி ராமச்​சந்​திரன் தலை​மையில் இன்ஸ்​பெக்​டர் பூமிநாதன் உள்​ளிட்ட 15 பேர் கொண்ட குழு​வினர் இருக்​கன்​குடி மாரியம்​மன் கோயில் முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தில் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, முடி காணிக்கை செலுத்த வந்த பக்​தர்​களிடம் முறைகேடாக வசூலித்த 32 பணி​யாளர்​களிடம் இருந்து ரூ59,600 பறி​முதல் செய்​யப்​பட்​டது.

அதைத் தொடர்ந்து, ரூ.60 கோடி​யில் நடை​பெற்ற திருப்​பணிகள் விவரம் குறித்து கோயில் அலு​வல​கத்​திலும், இந்து சமய அறநிலை​யத் துறை உதவி ஆணை​யர் அலு​வல​கத்​திலும் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்தி, முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றினர். மேலும், கோயில் அறங்​காவலர் குழு தலை​வர் ராமமூர்த்​தி​யிடமும் சுமார் 2 மணி நேரத்​துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT