சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் உள்ள திறந்தவெளி அகழ் வைப்பகத்தை நேற்று பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்.

 
தமிழகம்

கீழடி திறந்​தவெளி அகழ் வைப்பகத்தை பார்வையிட்ட துர்கா ஸ்டாலின்

செய்திப்பிரிவு

திருப்புவனம்: கீழடி திறந்​தவெளி அகழ் வைப்​பகத்தை முதல்​வர் ஸ்டா​லினின் மனைவி துர்கா பார்​வை​யிட்​டார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே கீழடி​யில் ரூ.24.30 கோடி​யில் 5,917 சதுர மீட்​டரில் திறந்​தவெளி அகழ் வைப்​பகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 13-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி மூலம் கீழடி திறந்​தவெளி அகழ் வைப்​பகத்தை திறந்து வைத்​தார். அதை பொது​மக்​கள் ஏராள​மானோர் பார்​வை​யிட்டு வரு​கின்​றனர்.

          

உள்ளரங்கு வைப்பகம்... இந்​நிலை​யில், கீழடி திறந்​தவெளி அகழ் வைப்​பகத்​தைப் பார்​வை​யிடு​வதற்​காக நேற்று மாலை முதல்​வரின் மனைவி துர்கா ஸ்டா​லின் வந்​தார். அவரை மாவட்ட வரு​வாய் அலு​வலர் செல்​வசுரபி, கோட்​டாட்​சி​யர் ஜெபிகிரேஸியா உள்​ளிட்​டோர் வரவேற்​றனர்.

தொடர்ந்​து, திறந்​தவெளி அகழ் வைப்​பகத்​தைப் பார்​வை​யிட்ட துர்கா ஸ்டா​லின், அரு​கே​யுள்ள உள்​ளரங்கு அகழ் வைப்​பகத்​தை​யும் பார்​வை​யிட்​டார். கீழடி அகழாய்​வுத் தள இயக்​குநர் ரமேஷ், இணை இயக்​குநர் அஜய் ஆகியோர் அகழ் வைப்​பகம் குறித்து அவருக்கு விளக்​கினர்.

பின்​னர், சிவகங்கை மாவட்​டம் பிள்​ளை​யார்​பட்டி சென்​று, கற்பக விநாயகர் கோயி​லில் துர்கா ஸ்டா​லின் தரிசனம் செய்​தார்.

SCROLL FOR NEXT