திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

 
தமிழகம்

தமிழகத்தில் தெளிவில்லாத நிர்வாகம் நடைபெறுகிறது: துரைமுருகன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழகத்தில் தெளிவில்லாத அரசு நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

இதுவரை எந்த மாநிலமும் 35 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கியது இல்லை. நம்மிடம் உள்ள மின் நிலையங்களில் ஏன் மின் உற்பத்தியை செய்யவில்லை. இதில், ஏதாவது உள்ளடி உண்டா என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

முதல்வர் வெளிநாடு செல்கிறார். வெளிமாநிலம் செல்கிறார். ஆனால், எந்த திட்டமும் தமிழகத்துக்கு வந்ததுபோல் தெரியவில்லை. அரசாங்க பணத்தை தொடமாட்டேன். தொட்டவர்களையும் விடமாட்டேன் என்றுதான் முதல்வர் விஜய் சொன்னாரே தவிர, மற்றவர்களிடம் பணம் வாங்க மாட்டேன், வாங்கியவர்களை விடமாட்டேன் என சொன்னாரா?

நான் யாரிடத்திலும் பணம் வாங்க மாட்டேன். வாங்கியவர்களையும் விட மாட்டேன் என சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். சினிமா எடுக்கும்போது முதலில் ஒரு தலைப்பு வைப்பார்கள். பிறகு வேறொரு தலைப்பு வைப்பார்கள். அதுபோன்றுதான் வெற்றிப் பயணம் திட்டம். தெளிவில்லாத ஒரு அரசு நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT