துரை வைகோ

 
தமிழகம்

இன்னொரு நடிகர் மூலம் விஜய்யை வீழ்த்த முடியாது: துரை வைகோ கருத்து

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: இன்னொரு நடிகரை வைத்து விஜய்யை வீழ்த்த நினைத்தால் நடக்காது என மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்தார்.

பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எல் நினோவால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிவாரணத்தை வழங்க வேண்டிய மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துகிறது.

வாக்காளர் திருத்தப்பட்டியலில் திமுக இரட்டை வேடம் போடுவது ஏற்புடையது அல்ல. திமுக சரியாக செயல்பட்டிருந்தால், தமிழகத்தில் குளறுபடி ஏற்பட்டிருக்காது. கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு அக்கட்சியின் அலட்சியம் தான் காரணம். மக்கள் மனநிலையை இன்றாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தவெக தலைவர் விஜய்யை, இன்னொரு நடிகரை வைத்துத் தான் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் எடுப்படாது. திராவிட கட்சிகளுக்கு அது அழகும் இல்லை. அதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. தமிழகத்திலும் அனைத்து அரசியல் கட்சிகளிலும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு களை எடுக்க வேண்டும் என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT