தமிழகம்

வேளச்சேரி, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 29-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கும்

செய்திப்பிரிவு

சென்னை: குடிநீர் குழாய் வழித்​தடம் மாற்​றும் பணி காரண​மாக வேளச்​சேரி, புழு​தி​வாக்​கம் உள்​ளிட்ட பகு​தி​களில் நாளை முதல் செப்​. 29-ம் தேதி வரை குடிநீர் விநி​யோகம் பாதிக்​கப்​படும் என குடிநீர் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநக​ராட்சி சார்​பில், சோழிங்​கநல்​லூர் மண்​டலம், 199-வது வார்​டு, டிஎன்​எச்​பி-ஏ பிர​தான சாலை​யில் அமைக்​கப்​பட்டு வரும் மழைநீர் வடி​கால் பணி​களுக்​காக அப்​பகு​தி​யில் ஏற்​கெனவே உள்ள நாளொன்​றுக்கு 150 மில்​லியன் லிட்​டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யத்​திலிருந்து குடிநீர் கொண்டு செல்​லும் 1400 மில்லி மீட்​டர் விட்​ட​முடைய பிர​தான குடிநீர் குழா​யின் வழித்​தடத்தை மாற்​றியமைக்​கும் பணி​கள் நாளை (செப்​.20) முதல் 29-ம் தேதி வரை மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

ஆகை​யால், 150 மில்​லியன் லிட்​டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீ​ராக்​கும் நிலை​யத்​திலிருந்து குடிநீர் வழங்​கப்​படும் வேளச்​சேரி​யில் உள்ள 172, 175, 176, 177 ஆகிய வார்​டு​கள் மற்​றும் பெருங்​குடி மண்​டலத்​தில் உள்​ளகரம், புழு​தி​வாக்​கம், மடிப்​பாக்​கம், பள்​ளிக்​கரணை, ஜல்​லடியன்​பேட்டை பகு​தி​களில் உள்ள 185, 186, 187, 188, 189, 190 191 ஆகிய வார்​டு​களில் குடிநீர் விநி​யோகம் நிறுத்​தப்​படும்.

மாற்று ஏற்​பா​டாக செம்​பரம்​பாக்​கம் 530 குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மூலம் குடிநீர் வழங்​கப்​படும். எனவே, பொது​மக்​கள் முன்​னெச்​சரிக்​கை​யாக, வேண்​டிய அளவு குடிநீரை சேமித்து வைத்​துக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT