தமிழகம்

ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு; புகையிலை பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்: மருத்துவர் நரசிம்மன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: உல​கள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சம் பேர் புகை​யிலை​யால் உயி​ரிழக்​கின்​றனர், இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த நுரை​யீரல் நிபுணர் மருத்​து​வர் நரசிம்​மன் கூறிய​தாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்​டு​தோறும் மே-31ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது.

இந்த ஆண்டு இளைஞர்​களை புகை​யிலை மற்​றும் நிக்​கோட்​டின் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​போம் என்ற கருப்​பொருளில் விழிப்​புணர்​வு​களை ஏற்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

உலகள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 70 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் புகை​யிலை நேரடி​யாக உட்​கொள்​வது மூல​மாக​வும், 16 லட்​சம் பேர் மறை​முக​மாக​வும் உயி​ரிழக்​கின்​றனர்.

தற்​போது பெரிய​வர்​கள் மத்​தி​யில் புகை பழக்​கம் குறித்த விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது, ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடம் வேப்​பிங் (இ-சிகரெட்) கலாச்​சா​ரம் அதி​கரிக்க தொடங்​கி​யுள்​ளது.

புகை​யிலையை உட்​கொள்​வதை விட இது பாது​காப்​பானது என்ற தவறான எண்​ணம் உள்​ளது. புகை​யிலையை புகைப்​ப​தால் என்ன பாதிப்​பு​கள் ஏற்​படுமோ அவை அனைத்​தும் இந்த வேப்​பிங் மூல​மாக​வும் வரும்.

இது இளைஞர்​களின் மூளை வளர்ச்​சி​யை​யும், மனநலத்​தை​யும் பாதிக்​கிறது. மேலும் மற்ற போதைப்​பழக்​கத்​துக்கு தொடக்க புள்​ளி​யாக​வும் அமைந்​து​விடு​கிறது.

நீண்ட கால​மாக புகைப்​பிடிப்​பவர்​களில் 50 சதவீதம் பேர் புகை​யிலை தொடர்​பான நோய்​களால் தான் உயி​ரிழக்​கின்​றனர். புகைப்​பிடித்​தல் என்​பது நுரை​யீரல் புற்​று​நோய், இதய நோய், பக்​க​வாதம், காச நோய் மற்​றும் பல்​வேறு சுவாச நோய்​களுக்கு நேரடி காரண ​மாக உள்​ளது.

பள்​ளி-கல்​லூரி​களுக்கு அரு​கில் புகை​யிலை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​வதை தடுத்து நிறுத்த வேண்​டும். இளைஞர்​களை ஆரம்ப கட்​டத்​திலேயே புகைப்​பழக்​கத்​தில் இருந்து தடுத்​து​விட்​டால், அவர்​களு​டைய எதிர்​காலம் புகை​யில்லா எதிர்​கால​மாக, ஆரோக்​கிய​மான​தாக இருக்​கும்.

பெற்​றோரும் ஆசிரியர்​களும் புகை​யிலை இல்​லாத முன்​னு​தா​ரணங்​களாக இருப்​பது மிக​வும்​ அவசி​யம்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT