நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

“எம்ஜிஆருடன் விஜய்யை ஒப்பிடுவது வேடிக்கை” - நயினார் நாகேந்திரன் கருத்து

செய்திப்பிரிவு

50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ள செங்கோட்டையன், எம்ஜிஆர் வழியில் நடிகர் விஜய் செயல்படுவதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் நேற்று கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்வதற் காகவும், உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்காகவும் மட்டுமே ஸ்டாலின் பதவி வகித்து வருகிறார்.

அரசின் திட்டங்களுக்கு திமுக போல பல்வேறு பெயர்களை நாங்கள் வைக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு ‘மக்கள் மன்றம்’ என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மத்திய அரசை குறை சொல்வதே வேலையாக உள்ளது.

செங்கோட்டையன் தவெக-வில் இணைவதற்கு முன்பாக சேகர் பாபுவை சந்தித்துள்ளார். ஆனால், பாஜக பின்னணி உள்ளது என்று திமுக-வினர் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ள செங்கோட்டையன், எம்ஜிஆர் வழியில் விஜய் செயல்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. எம்ஜிஆரின் கொள்கை வேறு, விஜய்யின் வழியும், கொள்கையும் வேறு. இதுகூட செங்கோட்டையனுக்கு தெரியாதா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT