தமிழகம்

ஆய்வுக் கூட்டத்தை ரீல்ஸ் எடுத்த வெளியிட்ட காங். எம்எல்ஏவை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி மருத்துவர்கள், செவிலியர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் முகமது யூனூஸ் பங்கேற்றார். அவர் பேசும்போது, ‘‘நோயாளிகளிடம் மருத்துவர்கள் கனிவாக நடந்து கொள்வதில்லை.

உரிய முறையில் பணி செய்யவில்லை என்றால் பணியிடமாற்றம் பெற்றுக்கொண்டு நீங்களே சென்றுவிடுங்கள். இல்லை என்றால் நான் களத்தில் இறங்கி போராட நேரிடும்’’ என்று கடுமையாக பேசியதுடன், அதை ரீல்ஸ் ஆக சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் அறிவழகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க துணைத் தலைவர் சரத் சந்திரன், செயலாளர் வினோத், நாகை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இயக்க செயலாளர் தர்மராஜ் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்.

SCROLL FOR NEXT