தமிழகம்

அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் முழுநேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்ட, சமூக நலன் மற்​றும் மகளிர் உரிமை துறை சார்​பில் மண்​டலம் 9 முதல் 15 வரை உள்ள திருநங்​கைகளுக்கு திறன் பயிற்​சிகள் வழங்கப்பட்டன.

இந்​நிலை​யில் பயிற்சி முடித்​தவர்​களுக்கு சான்​றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் மானி​யம் வழங்​கும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக அமைச்சர் மா.சுப்​பிரமணி​யன் கலந்து கொண்​டார்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ‘டிட்​வா’ புயல் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, அனைத்து மருத்​து​வ​மனை​களி​லும், டாக்டர்கள் முழு நேர பணி​யில் இருக்க அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

குறிப்​பாக மழை தொடங்​கிய பின்​பு, ஒரு பகு​தி​யில் காய்ச்​சல் பாதிப்​பு​கள் 2 பேருக்கு மேல் வந்​தாலே, அங்கு சிறப்பு மருத்​துவ முகாம்​கள் நடத்த உத்​தர ​விடப்​பட்​டுள்​ளது.

அனைத்து மருத்​து​வ​மனை​களி​லும் மின்​சா​ரம் தடைப​டா​மல் இருப்​ப​தற்​கான நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் மருத்​துவ பேராசிரியர் பதவி உயர்வு நேர்​மை​யாக வெளிப்​படைத் தன்​மை​யுடன் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT