தமிழகம்

செயற்கை நுண்ணறிவை நம்பி விசாரணையில் பங்கேற்க கூடாது: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை

செய்திப்பிரிவு

மதுரை: செயற்கை நுண்​ணறிவை முழு​மை​யாக நம்பி நீதி​மன்ற விசா​ரணை​களில் பங்​கேற்​பது எந்த வகை​யிலும் ஏற்​றுக்​கொள்​ளக் கூடியது அல்ல என வழக்​கறிஞர்​களுக்கு நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் கூறி​யுள்​ளார்.

மதுரை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர் சங்​கத்​தின் (எம்​பிஏ) சட்ட எழுத்​தறிவு மன்​றம் சார்​பில் செயற்கை நுண்​ணறிவு மற்​றும் மனித ஆற்​றல் பற்​றிய கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. இதை தொடங்கி வைத்து நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் பேசி​யது: தொழில்​நுட்​பம் என்​பது அடித்​தள​மாக இருக்​காது. தொழில்​நுட்​பம் கூரை போன்​றது. அடித்​தளத்தை மனிதன்​தான் அமைத்​துக்​கொள்ள வேண்​டும். ஒரு மனிதனின் தனித்​திறமை​யின் மீது அவன் நம்​பிக்கை கொண்டு எதை​யும் செயல்​படுத்த வேண்​டும்.

செயற்கை நுண்​ணறிவு என்​பது மனித​னால் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. எனவே மனிதன் அதை தனது வேலை​யாள் போலத்​தான் வைத்​துக்​கொள்ள வேண்​டும். அதை முழு​மை​யாக நம்பி அதன் முடி​வெடுக்​கெல்​லாம் மனிதன் தலை​யாட்​டி​னால் அது முதலா​ளி​யாக மாறி​விடும். செயற்கை நுண்​ணறிவை முழு​மை​யாக சார்ந்து படைப்​பு​கள் உரு​வாக்​கு​வதும், நீதி​மன்​றங்​களில் அதனை சார்ந்து மட்​டுமே விசா​ரணை​களில் பற்​கேற்​ப​தை​யும் எந்த வகை​யிலும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. எல்​லா​வற்​றை​யும் செயற்கை நுண்​ணறிவு பார்த்​துக் கொள்​ளும் என்று நினைத்​து, நம்​முடன் உள்ள அத்​தனை பிரச்​சினை​களை​யும் அதனுடன் ஒப்​படைத்​தால் வெற்​றிகர​மான இலக்கை அடைய எந்த வகை​யிலும் உதவாது.

இந்த உலகம் என்​பது ஒரு மனிதன் இன்​னொரு மனிதன் மீது வைக்​கும் நம்​பிக்​கை​யில்​தான் சுழல்​கிறது. குறைந்த உழைப்​பில் பெரிய வெற்​றியைப் பெற வேண்​டும் என்ற எண்​ணம் மனிதனுக்கு இப்​போது அதி​க​மாகி உள்​ளது. அதற்கு அவன் தேர்ந்​தெடுக்​கக்​கூடிய வழி​தான் இந்த செயற்கை நுண்​ணறி​வு.

புத்​தகங்​களை வாசித்​துக் கொண்டே இருக்க வேண்​டும். புத்​தகங்​கள் அறிவை விரிவு செய்​யும். ஒரு மனிதன் புத்​தகத்தை எந்​த​வித இடர்​பாடும் இல்​லாமல் கவனச் சிதறலும் இல்​லாமல் வாசிக்​கும்​பொழுது அவன் பெரிய விஷ​யங்​களைத் தெரிந்​து​கொள்​கிறான். இதனால் பெரி​தாகும் சிந்​தனை​யில் உரு​வாகக் கூடிய அனைத்து செயல்​களும் காலத்​துக்​கும் இருக்​கக் கூடிய​தாக இருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

எம்​பிஏ தலை​வர் மூத்த வழக்​கறிஞர் அருள்​வடிவேல்​சேகர் வரவேற்​றார். மூத்த வழக்​கறிஞர்​கள் கு.​சாமிதுரை, பி.சர​வணன், ஆர்​.​காந்​தி, மீனாட்சி சுந்​தரம், திலீப் குமார், ஹென்றி டிபேன், சாமுண்டி போஸ் உள்​ளிட்டோர் பங்கற்றனர். மீனாட்சி தொகுத்து வழங்​கி​னார். டி.எஸ்​.​முகமது முகை​தீன்​ நன்​றி கூறி​னார்​.

SCROLL FOR NEXT