தமிழகம்

எஸ்ஐஆர் குறித்து டிச.13-ல் திமுக சட்டத்துறை ஆலோசனை

செய்திப்பிரிவு

எஸ்ஐஆர் தொடர்பாக திமுக சட்டத் துறையின் ஆலோசனைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக சட்டத் துறையால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிச.13-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாக கட்சியின் சட்டத் துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை நிகழ்த்துகிறார். சட்டத் துறை இணை, துணைச் செயலாளர்கள், தலைமை வழக்கறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT