தமிழகம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு: டெல்லியில் அமித்ஷா - கனிமொழி ஆலோசனை

3 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை/ புதுடெல்லி: நிபந்​தனைகளைப் பாஜக அரசு ஏற்​றுக் கொண்​ட​தால், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகவும் 3 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்​தொடர் நாளை தொடங்கி டிசம்​பர் 2-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்​தக் கூட்​டத் தொடரில் தொகுதி மறு​வரை மசோதா, மகளிர் இடஒதுக்​கீடு மசோதாவை நிறைவேற்ற பாஜக தலை​மையி​லான மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சென்னை அண்ணா அறிவாலயத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மையில் அக்​கட்​சி​யின் எம்.பி.க்​கள் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தொகுதி மறு​வரையறை என்ற ஆபத்து வர உள்​ளது. அத​னால் தமிழகம் உள்​ளிட்ட தென் மாநிலங்​களின் தொகுதி எண்​ணிக்கை குறையும் என்று இந்​தி​யாவிலேயே முதல்​முதலாக எச்​சரித்​தது நாம்​தான். கடந்த ஏப்​ரல் மாதம், சட்​டப்​பேரவைத் தேர்​தல் காலத்​தில் யாரையும் கலந்து ஆலோ​சிக்​காமல் ஒரு மர்ம மசோதாவை கொண்டு வந்​தார்​கள். படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசர​மாகக் கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளு​மன்​றத்​தில் தோற்​கடித்​தோம்.

பாஜகவுக்​குக் கடும் அழுத்​தத்​தைக் கொடுத்​தோம். தற்​போது இருக்​கும் தொகுதி எண்​ணிக்​கையே தொடரலாம் என நாம் விரும்​பினாலும், தவிர்க்க முடி​யாத அரசி​யல் சாசன விதிப்​படி தொகுதி​களை அதி​கரிக்​கும் போது, அதில் தமிழகம் பாதிக்​கப்​பட கூடாது என ‘நடைமுறைக்கு ஏற்ற’ தீர்வை 2024-ம் ஆண்டே சட்​டப்​பேரவைத் தீர்​மானம் மூலமாக முன்​வைத்​தோம்.

நாம் மட்​டும் குரல் எழுப்​பாமல் இருந்​திருந்​தால், மக்​கள் தொகை அடிப்​படை​யில் வட மாநிலங்​களுக்கு மட்​டும் தொகுதி​களை அதி​கரித்​து​விட்டு, நமக்​கான பர்​செண்​டேஜை குறைத்​திருப்​பார்​கள். ஆனால், இன்​றைக்கு மசோதாவின் நகல் கிடைத்​துவிட்​டது. அதில் நாம் முன்​வைத்த 2 முக்​கிய​மான கோரிக்​கைகளுமே இடம்​பெற்​றுள்​ளன. இது நம்​முடைய 3 ஆண்டு கால தொடர் போராட்​டத்​துக்கு கிடைத்த வெற்றி. நாம் எதிர்​பார்த்த மாதி​ரியே இந்த மசோதா வந்​துள்​ளது. தமிழகத்​தின் நலன் பறிபோக கூடாது. அதில் சமரசம் செய்து கொள்ளமாட்​டோம்.

அடுத்த 25 ஆண்​டுகளுக்கு தமிழகத்​தின் பிரதி​நி​தித்​து​வத்தை காப்​பாற்​று​வதில், நம் முயற்​சி​யில் வெற்றி அடைந்​துள்​ளோம். கடந்த 1967-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்​பின் போது 42-ஆக இருந்த தமிழகத்​தின் மக்​களவை தொகுதி​களை 39-ஆக குறைத்​தார்​கள். தற்​போது நம்​முடைய பர்​சென்​டேஜில் எந்த மாற்​றமும் இல்​லாமல், நமக்​கான தொகுதி​கள் உயர்​வதை உறுதி செய்​துள்​ளோம்.

நாடாளு​மன்ற கூட்ட தொடரில் நம் நிலைப்​பாட்டை ஓங்​கிச் சொல்​லுங்​கள். கட்​சி​யின் நிலைப்​பாட்டை வெளிப்​படை​யாகச் சொல்​வதில் தயக்​கம் கூடாது. இவ்​வாறு ஸ்டா​லின் தெரி​வித்​தார். மசோதாவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக திமுக எம்.பி.க்​கள் கூட்​டத்​தில் தீர்​மானமும் நிறைவேற்றப்பட்டது.

தீர்​மானத்​தின் விவரங்​களைத் தெரி​விக்க, டெல்லி கிருஷ்ண மேனன் சாலை​யில் உள்ள மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் இல்​லத்துக்கு திமுக எம்.பி.க்​கள் கனி​மொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், வில்சன் ஆகியோர் சென்றனர். அங்கு அமித் ஷாவைச் சந்தித்து திமுக.வின் முடிவைத் தெரிவித்தனர்.

கனிமொழி விளக்கம்

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி திமுக எம்.பி.க்கள் 5 பேர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து திமுகவின் ஆதரவு குறித்து தெரிவித்தோம்.

தொகுதி மறுவரையறையால் வரக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேசாத கால கட்டத்திலேயே, ‘இருக்கக் கூடிய எண்ணிக்கையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி உயர்த்தினால் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொண்டுவர வேண்டும். தமிழகம் பாதிக்கப்பட கூடாது’ என முதல்முதலாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுகதான்.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு கட்சி தலைவர்களையும், 5 முதல்வர்களையும் அழைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடத்தினார். அதிலும் மிக தெளிவாக தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறைதான் வேண்டும் என்றார். ஆனால், கடந்த முறை 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், 50 சதவீதம் உயர்வுக்கான தகவல்கள் மசோதாவில் இடம்பெறவில்லை. இதனால் தமிழக மக்களவையின் எண்ணிக்கை 39-ல் இருந்து 32 ஆக குறைந்திருக்கும்.

அப்போது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தோம். இப்போது, திமுக வைத்த கருத்துகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 சதவீதம் எண்ணிக்கையை உயர்த்தி தருகிறோம் என்கிற மசோதாவை கொண்டு வருகின்றனர்.

இதன்மூலம் 59 எம்.பி.க்கள் தமிழகத்துக்கு கிடைப்பார்கள். இவ்வாறு அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பெற்று தந்திருக்க கூடிய மகிழ்ச்சி யோடு இந்த மசோதாவை திமுக ஆதரித்திருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இவ்விகாரத்தில் ‘கோழைகள்’ என்று யாரை பற்றி பேசுகிறார் என தெரியவில்லை. திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT