திமுக எம்.பி ஆ. ராசா

 
தமிழகம்

“டெல்லியில் காயமடைந்த மாணவர்களை சந்திக்க அனுமதி மறுக்கும் கொடுங்கோல் ஆட்சி” - ஆ.ராசா எம்.பி

தமிழினி

புதுடெல்லி: “நீட் தேர்விக்கு எதிராக தலைநகரில் போராடி, காயம்பட்ட மாணவர்களைச் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கும் கொடுங்கோல் ஆட்சி” என திமுக எம்.பி ஆ.ராசா சாடியுள்ளார்.

டெல்லியில் காயமடைந்த மாணவர்களின் உறவினர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்விக்கு எதிராக தலைநகரில் வீறுகொண்டு போராடிய மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறையில் காயமடைந்த மாணவர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளரைச் சந்தித்த நேரத்தில், மாணவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவிலே சிகிச்சை பெற்று வருவதால் அவர்களைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்பதாகச் சொன்னார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சையைக் கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தோம். அவர்களுடைய உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களைச் சந்திப்பதற்கே சுகாதாரத் துறை அமைச்சரிடமிருந்து அனுமதி தந்தால்தான் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளரை ஒன்றிய அரசு மிரட்டி உள்ளது.

ஒரு நோயாளியைச் சந்திப்பதற்குக்கூட ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்றுத்தான் சந்திக்க வேண்டும் என்று ஒரு கண்காணிப்பாளர் சொல்கின்ற அளவுக்குகு, ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT