தமிழகம்

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழக முதல்​வரை அவதூறாக பேசிய வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள மார்க்​கண்​டேயன் எம்​எல்​ஏ​வின் ஜாமீன் மனுவை, தூத்​துக்​குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் நேற்று தள்​ளு​படி செய்​தது.

கோவில்​பட்​டி​யில் கடந்த 18-ம் தேதி நடை​பெற்ற திமுக பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் வகை​யிலும் பேசி​ய​தாக, விளாத்​தி​குளம் தொகுதி திமுக எம்​எல்ஏ ஜி.​வி.​மார்க்​கண்​டேயன் கடந்த 20-ம் தேதி கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவரது ஜாமீன் மனுவை தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றம் கடந்த 22-ம் தேதி தள்​ளு​படி செய்​தது.

இதையடுத்​து, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் ஒத்​தி​வைத்​துள்​ளது.

இதே​போல், தூத்​துக்​குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தி​லும் மார்க்​கண்​டேயன் எம்​எல்​ஏவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி சுபாதே​வி, ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்​.

SCROLL FOR NEXT