சென்னையில் 5 ஆயிரம் ஏக்கரில் 2 இடங்களில் ஏஐ சிட்டி உருவாக்க திட்டம்: அமைச்சர் குமார் தகவல்

சென்னையில் 5 ஆயிரம் ஏக்கரில்  2 இடங்களில் ஏஐ சிட்டி உருவாக்க திட்டம்: அமைச்சர் குமார் தகவல்
Updated on
2 min read

சென்னை: அனைத்து உள்​கட்​டமைப்​பு​களு​டன் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) நகர் சென்​னை​யில் 5 ஆயிரம் ஏக்​கரில் 2 இடங்​களில் அமைக்க திட்​ட​மிட்​டுள்​ளோம் என்று தமிழக செயற்கை நுண்​ணறி​வு, தகவல் தொழில்​நுட்​பம், டிஜிட்​டல் சேவை​கள் துறை அமைச்​சர் கு​மார் தெரி​வித்​தார்.

இந்​திய வர்த்தக மற்​றும் தொழில் கூட்​டமைப்​பு சபை​யின் (ஃபிக்​கி) தமிழக பிரிவு சார்​பில், “டிஜிட்​டல் இடையூறு மற்​றும் உரு​மாற்​றம் தொடர்​பாக மாநாடு மற்​றும் கண்​காட்சி நேற்று நடை​பெற்​றது.

இந்த மாநாட்டை தமிழக செயற்கை நுண்​ணறி​வு, தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் டிஜிட்​டல் சேவை​கள் துறை அமைச்​சர் ஆர்​.கு​மார் தொடங்கி வைத்து பேசி​ய​தாவது: ஒரு சிறந்த உலகை உரு​வாக்க, நெறி​முறை சார்ந்த ஏஐ பயன்​படுத்த வேண்​டும். இந்த ஏஐ-யை பயன்​படுத்​து​வதற்​கான ஒரு சூழலமைப்பை உரு​வாக்க முடி​யும்.

அதற்​குப் பல்​கலைக்​கழகங்​கள், ஆராய்ச்சி மையங்​கள், தொழில்​துறை​களின் ஒத்​துழைப்​பு தேவை. உலகம் முழு​வதும் நிகழ்ந்து வரும் தொழில்​நுட்ப மாற்​றங்​கள் குறித்து மக்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் குமார் கூறிய​தாவது: ஏஐ சிட்டி என்​பது ஒரு தொலை நோக்கு பார்​வை. தமிழகத்​தில் பயிற்சி பெற்​று, படித்​து​விட்டு ஒரு சிலரை தவிர பலர் வெளி​நாடு​கள், அண்டை மாநிலங்​களுக்கு வேலைக்​காக செல்​கின்​றனர். இதற்கு காரணம் தமிழகத்​தில் இருக்​கும் கட்​டமைப்​பு. இந்த கட்​டமைப்பை வலிமைப்​படுத்த வேண்​டும். சுற்​றுச்​சூழலமைப்பு இருக்க வேண்​டும்.

நாட்​டின் எல்லா உள்​கட்​டமைப்​பு​ களையும் கொண்​டு, ஏஐ நகரை உரு​வாக்க வேண்​டும். எல்​லா​வற்​றை​யும் முழு​மை​யாக உரு​வாக்​கி, சுற்​றுச்​சூழல் அமைப்பை கொண்​டு​வந்​து, 2 ஆயிரம் ஏக்​கர் முதல் 5 ஆயிரம் ஏக்​கரில் ஏஐ சிட்​டி உரு​வாக்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.

4 ஆயிரம் ஏக்கரில் தொடங்​கி, ஒவ்​வொரு கட்​ட​மாக, 2 ஆயிரம் ஏக்​க​ராக அதி​கரிக்க திட்​ட​மிட்​டுள்​ளோம். ஏஐ சிட்​டிக்கு சென்​னை​யில் 2 முதல் 3 இடங்​களை தேர்வு செய்து உள்ளோம். எதிர்​காலத்​தில் நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி)​யில் முன்னணியில் இருக்க வேண்​டுமெனில் ஏஐ கட்​டா​யம் மாநிலம் முழு​வதும் மேம்பட வேண்​டும்.

தமிழை எல்​லாரும் வளர்க்க வேண்​டும். குழந்​தைகள் நன்​றாக படிக்க வேண்​டும். குழந்​தைகள் படித்​து, அவர்​களுக்​குள் இருக்​கும் தாழ்வு மனப்​பான்மையை நீக்கி​விட்​டால், இங்கு இருப்​பது போல மனிதவளம் வேறு எங்​கும் இல்​லாத நிலை உரு​வாகும்.

இவ்​வாறு அவர் பேசி​னார். தகவல் தொழில்​நுட்ப துறை செயலர் அதுல் ஆனந்த் பேசுகை​யில், “தொழில்​துறை​களுக்கு நெறி​முறை சார்ந்த வடிவ​மைப்​பைக் கொண்ட ஏஐ தேவை.

இளைஞர்​கள் தொழில்​துறை​யில் நுழை​யும்​போது தாங்​கள் பெற்ற அறிவைப் பயன்​படுத்​திக்​கொள்​ளும் வகை​யில், பள்​ளி​களி​லேயே அவர்​களுக்கு ஏஐ குறித்த பயிற்​சியை அளிக்க வேண்​டும்” என்​றார். மாநாட்​டில், ஃபிக்கி தமிழக பிரிவு தலை​வர் ஜி.எஸ்​.கே.வேலு, ஃபிக்கி தமிழக பிரிவு தொழில்​நுட்​பக் குழு​வின் ஒருங்​கிணைப்​பாளர் ராஜா​ராம் வெங்​கட​ராமன் உள்பட பலர் பேசினர்.

சென்னையில் 5 ஆயிரம் ஏக்கரில்  2 இடங்களில் ஏஐ சிட்டி உருவாக்க திட்டம்: அமைச்சர் குமார் தகவல்
சென்னையில் உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி திட்டம்: முதல்வர் விஜய் முன்னிலையில் 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in