தமிழகம்

உதயநிதியை அழைத்துச் சென்ற காவல் வாகனத்தை மறித்த திமுக தொண்டர்கள்

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக உதயநிதியை அழைத்துச் சென்ற காவல் வாகனத்தை மறித்த திமுக தொண்டர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணித் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, இரட்டைப் பொருள்படும் படி பேசியதாக தவெக மகளிர் அணி அளித்தப் புகாரின் பேரில், இன்று தஞ்சை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையிலுருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச் சாவடியை காவல் வாகனங்கள் கடந்த போது, அங்கு திரண்டிருந்த திமுகவினர், காவல் வாகனத்தை தடுக்க முயற்சித்து, சாலையில் படுத்தும், வாகனத்தின் முன் திரண்டும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தியப் பின் காவல் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்ற அதனை முற்றுகையிட்டு மறிக்க முயன்ற திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT