தமிழகம்

சமூக நோய்களுக்கும் சிகிச்சை தரவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை:​ நாட்​டில் உள்ள சமூக நோய்​களுக்​கும் மருந்து கண்​டு​பிடித்து சிகிச்சை அளிக்க வேண்​டும் என்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

கலைஞர் டிவி செய்​திப் பிரிவுத் தலை​வர் திரு​மாவேலன் மகள் அமிர்தா - ரபிந்​திரன் திரு​மணம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்டு மணமக்​களை வாழ்த்​தி​னார். பின்​னர், மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: திருக்​குறள் நெறிப்​படி இந்த மணவிழா நடந்​துள்​ளது.

இது​தான் தமிழர் நெறி, தமிழர் பண்​பாடு. இதைத்​தான் திரா​விட இயக்​கம் நூறாண்டு கால​மாக வலி​யுறுத்​தி, தொடர்ந்து நிறைவேற்றி செயல்​படுத்தி வரு​கிறது. கடந்த 1967-ம் ஆண்​டுக்கு முன்பு இது​போன்ற சுயமரி​யாதை திரு​மணங்​கள் சட்​டப்​படி செல்​லுபடி​யாகும் என்ற அங்​கீ​காரம் இல்​லாமல் இருந்​தது.

முதன்​முதலில் ஒரு மாநிலக் கட்சி தமிழகத்​தில் ஆட்​சிப் பொறுப்​பேற்​று, திமுக ஆட்சி உதய​மாகி, 1967-ல் அண்ணா முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​றார். சட்​டப்​பேர​வைக்​குச் சென்​று, தமிழகத்​துக்​காக முத்​தான 3 திட்​டங்களை நிறைவேற்​றித் தந்​தார்.

ஒன்​று, இருமொழிக் கொள்​கை. இன்​னொன்​று, தமிழகத்​துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்​டக்​ கூடிய நிகழ்​வு. அடுத்​தது, சுயமரி​யாதை திரு​மணங்​கள் செல்​லுபடி​யா​வதற்​கான சட்​டம்.

அண்​ணா​வால் சட்ட அங்​கீ​காரம் பெற்​றுத் தரப்​பட்ட சுயமரி​யாதை திரு​மணம்​தான் இங்கு நடந்துள்​ளது. இல்​வாழ்க்கை என்​பது அன்​பும், அறனும் கொண்​ட​தாக அமைய வேண்​டும் என்று கூறி​யுள்​ளார் திரு​வள்​ளுவர்.

இங்கு மணமக்​கள் இரு​வருமே மருத்​து​வர்கள். அவர்​களுக்கு ஓர் அன்​பான வேண்​டு​கோள். மனிதர்​களின் நோய்க்கு எப்​படி மருந் துகளைக் கண்​டு​பிடித்து சிகிச்சை வழங்கி வரு​கிறீர்களோ, அது​போல இன்​றைக்கு நாட்​டில் உள்ள ‘சமூக நோய்க்​கும்’ மருந்து கண்​டு​பிடித்​து, அதற்​கும் நீங்​கள் சிகிச்சை அளிக்க வேண்​டும்.

அந்த பணியை நிறைவேற்​றும் கடமையை நீங்​கள் நிறைவேற்​றித் தர வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கிறேன். உங்​களுக்கு ஆண், பெண் என எந்தக் குழந்தை பிறந்​தா​லும், அழகான தமிழ்ப் பெயரைச் சூட்​டுங்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT