தமிழகம்

சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்​டா​லினை, திமுக வேட்​பாளர்​கள் சென்னை அறி​வால​யத்​தில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது வெற்றி வாய்ப்​பு​கள் குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேட்​டறிந்​தார்.

தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்​கான தேர்​தல் ஒரேகட்​ட​மாக கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற்​றது. இதன் வாக்கு எண்​ணிக்கை தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடத்​தப்​படு​கிறது.

இதற்​கிடையே சமீபத்​தில் வெளி​யான தேர்​தலுக்கு பிந்​தைய கருத்து கணிப்​பு​களில் பெரும்​பாலானவை திமுக கூட்​டணி வெற்றி பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளன. இதனால் திமுக நிர்​வாகி​கள் உட்பட கட்​சி​யினர் மிகுந்த உற்​சாக​மாக காணப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லினை சென்னை அறி​வால​யத்​தில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் திமுக வேட்​பாளர்​கள் நேற்று சந்​தித்து பேசினர்.

திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், அமைச்​சர்​கள் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், எ.வ.வேலு, கே.ஆர்​. பெரியகருப்​பன், சு.​முத்​து​சாமி, சி.வீ.மெய்​ய​நாதன், சி.​வி.கணேசன், செந்​தில் பாலாஜி, திமுக துணை அமைப்​புச் செய​லா​ளர் எஸ்​.ஆஸ்​டின், டி.ஜெ.கோ​விந்​த​ராஜன், சபா.​ராஜேந்​திரன், நாமக்​கல் ராணி, காதர்​பாட்சா முத்​து​ராமலிங்​கம், கே.எஸ்.மூர்த்​தி, ரெ.மகேஷ், ஆ.தமிழரசி, எஸ்​.ஏ.சத்​யா, மு.மணி​கண்​டன், புதுச்​சேரி ஆர்​.சிவா ஆகியோர் நேரில் சந்​தித்​தனர்.

அவர்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்​தி​னார். பெரும்​பாலான கருத்​துக் கணிப்​பு​கள் திமுக​வுக்கு சாதக​மாக வெளிவந்​துள்ள நிலை​யில், கட்​சி​யின் வெற்றி வாய்ப்​பு​கள் குறித்து அவர்​களிடம் ஸ்டா​லின் கேட்​டறிந்​தார்.

மேலும், வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது கட்​சி​யினர் விழிப்​புடன் செயல்பட வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தி​னார். இந்​நிகழ்​வின்​போது திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, செய்​தித் தொடர்பு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன்​ உள்​ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT