திமுக வேட்பாளர் சுகன்யா வேட்புமனு தாக்கல்

 
தமிழகம்

இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்

எம்.நாகராஜன்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று (செப்.15) கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவருடன் ஈரோடு எம்பி பிரகாஷ், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக, நாதக ஆகியவை வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.

அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இதன் மூலம் மீண்டும் அவர் இத்தொகுதியில் தவெக வேட்பாளராக களம் காண்கிறார்.

திமுக சார்பில் வழக்கறிஞர் அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் சுகன்யாவும், அதிமுக சார்பில் புறநகர்மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ள பானுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் சார்பில் கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் கட்சி அலுவலகங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. நாள்தோறும் காலை முதல் இரவு வரை அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று (செப்.15) கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

SCROLL FOR NEXT